புதன், 4 டிசம்பர், 2013

ட்விட்டரில் வடிவேலு. ஹலோ டுவிட்டர் பேன்ஸ்... எல்லாருக்கும் வணக்கm

வடிவேலுவைப் பற்றி ஆயிரம் செய்திகள். ஆனால் ஒன்றிற்கும் மனுசன் பதில் தருவதாக இல்லை. அவரும் அமைதியாகப் படித்துவிட்டு அடிப்பொடிகளுடன் கமெண்ட் அடிப்பதோடு சரியாம். இந்த நிலையில்தான், வடிவேலு மீண்டும் சிங்கமுத்துவுடன் சமாதானமா போயிட்டார்.. அதிமுகவுக்கு போகப் போகிறார், என்று ஒரு செய்தி. ஆனால் அதிமுக மேடையில், 'இல்லையில்லை... வடிவேலுதான் தானா இறங்கி வந்து என்கிட்ட தூதுவிட்டார். நான் அதை நான் ஏத்துக்கலை,' என்று சிங்கமுத்து பதிலளித்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார். 'ந்தா, அக்கவுண்டை ஓபன் பண்ணியாச்சு...' - ட்விட்டரில் வடிவேலு.. ஒரு கலகல வீடியோ! பெரிய பத்திரிகைகளுக்கு மட்டும் ஆனால் எதற்குமே வடிவேலு தரப்பிலிருந்து பதிலில்லை. மீடியாவின் தொடர்பு எல்லைக்குள்ளும் அவரில்லை. பெரிய பத்திரிகைகள் என்ற போர்வையில் அவரை நாறடித்தவர்களையே தேடிப் போய் பேட்டியும் ஸ்பெஷல் ஸ்டில்களும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்
இன்னமும். சமூக வலைத்தளங்களில்.. இந்த நிலையில்தான் சமூக வலைத் தளங்களில் வடிவேலுவை நுழைய வைத்திருக்கிறார்கள் அவரது புதிய அடிப்பொடிகள். முதல் கட்டமாக ட்விட்டரில் இணைந்துள்ளார் வடிவேலு. அடுத்து பேஸ்புக்குக்கும் வந்துடுவார் போல... ஹலோ டுவிட்டர் பேன்ஸ்... டுவிட்டரில் தனது வருகையை அறிவிக்கும் வீடியோவில், "ம்.ஹலோ டுவிட்டர் பேன்ஸ்... எல்லாருக்கும் வணக்க என் ப்ரெண்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க, அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க... ஏற்கெனவே பேங்க்ல அக்கவுண்ட் ஓபன்லதான்யா இருக்கு.. இன்னொன்னு எதுக்குன்னுதான் நான் சொன்னேன். இல்லங்க, டுவிட்டர்ல அக்கவுன்ட் ஓபன் பண்ணுங்கன்னு சொன்னாங்க.. ஏம்ப்பா.. டுவிட்டர்தானே.. (ஆமாண்ணே ஆமாண்ணே - அடிப்பொடிகள்). அன்பைப் பரிமாற அந்த பேங்க் பணத்தைப் பறிமார்ற பேங்க்.. இது அன்பைப் பரிமார்ற பேங்க் அப்படின்னாங்க... அப்ப உடனே கடையைத் தொறங்க, சந்திச்சே ஆகணும்னு தொறந்தாச்சு. இடி அடிக்கடி நாம மீட் பண்ணிக்கிட்டே இருக்கலாம். இடையில சின்ன கேப் இடையில சின்ன கேப் விழுந்துடுச்சி... விரைவில் உங்களை சந்திப்பேன். ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் விரைவில் ரிலீசாகிடும். சீக்கிரமா மீட் பண்ணுவேன். எல்லாருக்கும் வணக்கம்,' என்று கூறியுள்ளார். அதுசரி, உடனிருக்கும் அடிப்பொடிகள் ஏன் அத்தனை சோகமாகவும் செயற்கையான சிரிப்போடயும் இருக்காங்க வடிவேலு சார்...! வடிவேலுவின் ட்விட்டர் பக்கம்: twitter.com/Actor_Vadivelu

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக