புதன், 4 டிசம்பர், 2013

நயன்தாராவுடன் சுத்தாதே! தேர்தல் வர்ற நேரத்துல கேட்ட பேர் வாங்கி தராதே !

நயன்தாரா, உதயநிதியுடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றபோது, நயன்தாரா, உதயநிதி, இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் பழனி முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ரோப் காரில் உதயநிதியும் நயன்தாராவும் ஒன்றாக ஏறிப் போனார்கள்.
கோயிலுக்கு நயன்தாரா வந்திருக்கிறார் என்கிற செய்தி காட்டுத்தீ போல் பரவியதும், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டம் மொத்தமும் அவர்களை சூழ்ந்து விட்டார்களாம். இதை பார்த்த நயன்தாரா, உதயநிதி ஸ்டாலின் அவசர அவசரமாக சாமி தரிசனம் செய்துவிட்டு பலத்த பாதுகாப்புடன் காரில் ஏறி பறந்து விட்டார்களாம்.
இந்த செய்தி அப்படியே சென்னையிலிருக்கும் உதயநிதி உடைய தாத்தாவின்(கருணாநிதி) காதிற்குச் சென்றிருக்கிறது. உடனே அவர் ‘தேர்தல் வர்ற நேரத்துல இப்படியெல்லாம் சுத்தறது கட்சிக்கு கெட்டப்பேரை வாங்கித் தரும். தவிர்க்கலாமேப்பா’ என்றாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக