செவ்வாய், 24 டிசம்பர், 2013

FULL போதையில் ஆட்சி நடத்தும் கம்யுனிஸ்ட் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன் ! தோழர்களின் ராஜ்யத்தில் உய்யலாலா

சுட்டு கொல்லுங்கள்” உத்தரவிட்ட ஜனாதிபதி, தவழும் அளவுக்கு போதையில் இருந்தார் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்ட தமது மாமனின் இரு நெருங்கிய சகாக்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட போது, ‘தவழும்’ அளவுக்கு போதையில் இருந்தார் என ஜப்பானிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. >வட கொரியாவில் நீண்ட காலம் ஜனாதிபதியாக இருந்த கிம் ஜொங்-இல் மரணமடைந்தபின், ஜனாதிபதியானவர், அவரது இளைய மகன் கிம் ஜொங்-உன். இவருக்கு ‘எல்லாமுமாக’ இருந்தவர், மாமன் ஜாங் சொங்-தேக். இந்த மாமன் உயர் மட்டக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்டார்
அதன்பின் அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது என வட-கொரிய அரசு நியூஸ் ஏஜென்சி KCNA செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக விறுவிறுப்பு.காமில் போட்டோ எஸ்ஸே ஒன்று வெளியிட்டிருந்தோம். (அதை தவறவிட்டிருந்தால், இங்கே கிளிக் செய்யவும்)
அதன்பின், மாமனின் இரு நெருங்கிய சகாக்களுக்கு தற்போரு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் செய்த குற்றம் என்ன என்று வெளிப்படையாக கூறப்படவில்லை. (மாமன் கொல்லப்பட்டபோது அதற்கு காரணம், ‘நாயை விட கேவலமானவர்’ என்று கூறப்பட்டிருந்தது)
தற்போது கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் ரி ரியொங்-ஹா. இவர் வட கொரிய ஆளும் கட்சியின் நிர்வாக இலாகாவின் துணை இயக்குனர். மற்றையவரின் பெயர், ஜாங் சு-கில். இவரும் அதே இலாகாவில் மற்றொரு துணை இயக்குனர்.
“இந்த இருவரும் ஏன், எப்படி கொல்லப்பட்டனர் என்பதை தென் கொரிய உளவுத்துறை தெரிந்து வைத்திருக்கிறது” என இன்று செய்தி வெளியிட்டுள்ளது, ஜப்பானிய பத்திரிகை யொமியூரி ஷிம்பன்.
ஜப்பானியப் பத்திரிகை செய்தியின்படி, இவர்கள் இருவருக்குமே, அடுத்து தம்மை கைது செய்ய இளம் கிம் ஜனாதிபதி உத்தரவிட்டு விட்டார். எந்த நிமிடத்திலும் காவலர்கள் தம்மை இழுத்துச் செல்ல வரப் போகிறார்கள் என்ற விஷயம் முன்கூட்டியே தெரிந்து விட்டது.
அப்போது, ஜனாதிபதி கிம் ஜொங்-உன் மது அருந்த தொடங்கியிருந்தார். அதனால் தமது கதி அதோ கதிதான் என்று புரிந்து கொண்டிருந்த இந்த இருவரும், வெளிநாடுகளில் உள்ள தமது நண்பர்களுக்கு போன் செய்து பதட்டத்துடன் விஷயத்தை கூறியிருக்கின்றனர். அந்த போன் அழைப்புகளை, தென் கொரிய உளவுத்துறை ஒட்டுக்கேட்டு, ரிக்கார்ட் பண்ணிவிட்டது.
போனில் இவர்கள் பேசிய பேச்சில் இருந்து, கொல்லப்பட்ட மாமன் ஜாங் சொங்-தேக் வசமிருந்த நல்ல லாபம் தரக்கூடிய இரு ‘கற்பகதரு’ வியாபாரங்களை இந்த இருவரும்தான் கவனித்து கொண்டிருந்தார்களாம். அதாவது, ஜனாதிபதியின் மாமனின் பினாமிகள் இவர்கள்.
மாமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவுடன், “இந்த இரு வியாபாரங்களையும் உடனே தம்மிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்ற ஜனாதிபதியின் உத்தரவு இவர்களுக்கு சொல்லப்பட்டது. உத்தரவிட்டு 48 மணி நேரமாகியும், இரு வியாபாரங்களையும் இந்த இருவரும் முழுமையாக ஒப்படைக்கவில்லை.
மாலையில் மது அருந்த தொடங்கிய ஜனாதிபதி, “இருவரும் வியாபாரங்களை திரும்ப கொடுத்து விட்டார்களா?” என்று விசாரித்திருக்கிறார். “இல்லை” என்று பதில் வந்ததும், “இருவரையும் கைது செய்து இழுத்துவாருங்கள்” என உத்தரவிட்டுள்ளார்.
அந்த அறையில் இருந்த யாரோ, இந்த தகவலை இவர்களுக்கு பாஸ் செய்து விட்டதில், இவர்கள் பதட்டத்துடன் தமது வெளிநாட்டு நண்பர்களை தொடர்பு கொண்டு, ஏதாவது செய்ய முடியுமா என விசாரித்திருக்கிறார்கள். அந்த உரையாடல்தான், பக்கத்து நாடான தென் கொரியாவின் உளவுத்துறை அலுவலகத்தில் ஒட்டுக் கேட்கப்பட்டது.
அதன்பின் இந்த இருவரும் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர். ஜனாதிபதி தொடர்ந்தும் மது அருந்திக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் ஜனாதிபதி உச்ச போதைக்கு சென்றுவிட்டார்.
எதிரேயிருந்த மேஜையில் சரிந்து தவழும் நிலையில் இருந்த ஜனாதிபதி, “அந்த இருவருக்கும் மரண தண்டனை” என்று தீர்ப்பு கூறிவிட, இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக