செவ்வாய், 24 டிசம்பர், 2013

நீதிமன்றங்களில் பெண்களை இழிவுபடுத்தும் சொற்பொழிவுகளை நிகழ்த் தக் கூடாது

புதுடில்லி, டிச.23- வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வழக்குக்குள் நின்று தீர்ப்புகளை வழங்க வேண்டுமே தவிர வழக்குக்கு அப்பால் சென்று பெண்களை இழிவுபடுத்தும் வகை யிலும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மையிலும் தேவை யில்லாத சொற்பொழிவு களை நீதிமன்றங்களில் நிகழ்த் தக் கூடாது என்று டில்லி உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. டில்லியில் பாலியல் வன்கொடுமை தொடர் பான ஒரு வழக்கின் தீர்ப்பில், "19 முதல் 24 வயது வரை உள்ள இளம் பெண்கள் அவர்களு டைய காதலர்களுடன் தன்னிச்சையாக வீட்டை விட்டு ஓடிப் போய்விடு கின்றனர்' என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். மேலும், பெண்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டு, குறிப்பிட்டபடிதான் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவது போன்ற வகையிலும் நீதிபதி கருத்து தெரிவித்திருந் தார்.

விசாரணை விரைவு நீதிமன்ற நீதிபதியின் இத் தீர்ப்பை அறிந்த டில்லி உயர்நீதிமன்றம், தானே முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணை யின் முடிவில் அந்த நீதி பதியின் கருத்துகளுக்கு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதீப் நந்த்ர ஜோக், வி.கே.ராவ் ஆகி யோர் அடங்கிய அமர்வு  கண்டனம் தெரிவித்தது.
"வழக்கில் முன் வைக் கப்படும் சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப் படையில்தான் தீர்ப்பு வாசகங்கள் இருக்க வேண்டுமே தவிர, தங்க ளது சொந்த அல்லது சமூகப் பார்வைகளைத் தீர்ப்புகளில் தெரிவிக்கக் கூடாது' என்று நீதிபதி கள் தெரிவித்தனர்.
தீர்ப்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ள தாவது: இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி தெரி வித்த கருத்துகள் பொது வான தன்மையிலானவை.
பெண்களுக்கு எதிரான கருத்துகள்
பெண்களுக்கு எதி ரான கருத்துகளையும், அலட்சியமான விமர் சனங்களையும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள் ளார். முடிவு எடுப்பதில் பெண்களின் நிலை குறித்து தனது சொந்த அபிப்ராயத்தை நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். அது தவறானது.
மாறி வரும் இந்திய சமூகத்தில் முடிவு எடுப் பதில் பெண்கள் குழப்ப நிலையில் உள்ளனர். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்குள்ள விருப்பம் மற்றும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகச் சூழல் ஆகியவற்றுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொண்டு வதை படுகின்றனர். அதை கவ னத்துடனும் கருணை யுடனும்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, சொற் பொழிவு போன்ற அறி வுரைகளைத் தரக் கூடாது.
இந்த வழக்கின் தீர்ப் பில் விசாரணை நீதிமன்ற நீதிபதி, அப்பெண் குறித்து தெரிவித்த கருத்துகள், "அப் பெண் எப்படி சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டும்' என பிரசங்கம் செய்வதைப் போல உள்ளது. அது நீதிபதியின் வேலையல்ல.
சமூக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு தனி நபருக்கும் உரிமை உள்ளது. சிலர் அவ்வாறு தேர்வு செய்யும்போது விரும்பத்தகாதவை நடந்துவிடுகின்றன. அதற்காக நீதிமன்றங்கள், "உன் வாழ்க்கையை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அப் படி இல்லாவிட்டால் இந்த சமூகம் உனக்காக கண்ணீர் வடிக்காது' என்று சொல்லக் கூடாது.
அலட்சியமான பார் வையுடன் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள், காவல் நிலையங்களில் பெண்களைத் துன்புறுத் தவே உதவும். மேலும், அலட்சியமான முறை யில் விசாரணைகள் நடைபெறுவதுடன், குற் றச்சாட்டுகளுக்குப் போது மான, முழுமையான சாட் சியங்கள் நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர முடியாத சூழல் ஏற்படும்.
காவல்துறையினருக்குப் புது வசதி!
நீதிமன்றங்களின் இது போன்ற தீர்ப்புகள், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது காவல் துறையினருக்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அதன்படியே விசாரிக்க வழி வகுத்து விடும். மேலும், இது போன்ற தீர்ப்புகளை முன்வைத்து, பாதிக் கப்படும் பெண்களுக்கு எதிராக வழக்குரைஞர் கள் வாதிடக் கூடும்' என்று நீதிபதிகள் கூறி யுள்ளனர்.
www.viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக