திங்கள், 9 டிசம்பர், 2013

சுவேதா மேனன் ! இந்தியாவிலேயே துணிச்சலான நடிகை ! பாக்கியராஜ் படத்தில் நடிக்கிறார்

சென்னை: எம்.பி. மீது சில்மிஷ புகார் கூறிய சுவேதா மேனனுக்கு அரசியல் கதை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.கே.பாக்யராஜ் நடித்து, இயக்க உள்ள படம் துணை முதல்வர். அரசியல் பின்னணியில் இப்படக்கதை உருவாகிறது. இதில் ஹீரோயினாக சுவேதா மேனன் நடிக்கிறார். சமீபத்தில் கொல்லத்தில் நடந்த படகு போட்டி பரிசளிப்பு விழாவில் சுவேதா மேனன் கலந்துகொண்டார். அப்போது அதே விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப் சுவேதாவிடம் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கலெக்டரிடம் புகார் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார் சுவேதா. எம்.பி. மன்னிப்பு கேட்டதால் புகார் வாபஸ் பெற்றதாகவும் சுவேதா பிறகு தெரிவித்தார். இந்நிலையில்தான் துணை முதல்வர் படத்தில் நடிக்க சுவேதா ஒப்பந்தமாகியுள்ளார். துணை முதல்வர் காரசாரமான அரசியல் படக்கதை எனக் கூறப்படுகிறது. இதில் எம்.பி. மீது புகார் கூறி சர்ச்சையை கிளப்பிய சுவேதா நடித்தால் நன்றாக இருக்கும் என்று பாக்யராஜ் விரும்பினாராம். மேலும் படத்தில் ஹீரோயினுக்கு துணிச்சலான பெண் கேரக்டராம். அதனாலேயே சுவேதாவை பாக்யராஜ் நடிக்க வைப்பதாக சொல்லப்படுகிறது. .tamilmurasu.org  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக