திங்கள், 9 டிசம்பர், 2013

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவில் மோதல் போலீஸ் கார்கள் எரிப்பு ! திடீர் பதற்ற

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக இங்கு வசிப்பதால், லிட்டில் இந்தியா என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு மக்கள் நடக்கின்றனர். இங்கு போராட்டங்கள், ஊர்வலம் நடப்பது அரிதிலும் அரிது. இந்நிலையில், தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் நேற்றிரவு திடீரென தெற்கு ஆசிய மக்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து கார்களில் விரைந்து வந்த போலீசார் மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். அப்போது சிலர், போலீஸ் கார்களை தீயிட்டு கொளுத்தினர். இதனால் பதற்றம் அதிகரித்தது. இதுகுறித்து சிங்கப்பூர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் ஹெம்ஸ்ஷைர் சாலைகளில் இரவு 9.23 மணிக்கு திடீரென மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

சட்ட திட்டங்கள் கடுமையாக அமல்படுத்தபடும், மக்கள் ஒழுங்குமுறையாக நடந்து கொள்ளும் சிங்கப்பூரில் திடீர் மோதலில் போலீசார் வாகனங்கள் எரிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக