சனி, 7 டிசம்பர், 2013

மத கலவரத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை: மத்திய அரசு அதிரடி

புதுடில்லி: 'வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா நிறைவேறினால், மத கலவரங்களில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வகுப்புவாத வன்முறை சட்ட மசோதாவுக்கான வரைவுகளை, மத்திய அரசு, உருவாக்கியுள்ளது. இந்த மசோதாவில், சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி, மத கலவரத்தில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படும். மத கலவங்களை தூண்டும் வகையில் பிரசாரம் செய்வோருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பான, வழக்கின் விசாரணையும், குற்றம் நடந்த மாநிலத்திலிருந்து, வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும். இவ்வாறு, மத்திய அரசு வட்டாரஙகள் தெரிவித்தன.
முன் ஜாமின் கிடையாது:சுப்ரீம் கோர்ட்டில், ஒரு வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில்,"தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கும், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கும், முன் ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்யும் உரிமை இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக