சனி, 7 டிசம்பர், 2013

பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரியை தாக்கிய குற்றவாளி கைது


பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி ஜோதி உதய் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அம்மாநில போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வந்தனர். குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு போலீசார் பரிசுத் தொகையும் அறிவித்திருந்தனர். குற்றவாளியின் புகைப்படத்தை அனைத்து காவல்நிலையத்திற்கும் போலீசார் அனுப்பி வைத்திருந்தனர்.
இந்தநிலையில் அந்த குற்றவாளி தும்கூரில் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் கர்நாடக மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக