திங்கள், 9 டிசம்பர், 2013

மலக்குழிக்குள் மனிதனை இறக்காதே: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மறியல் போராட்டம்

மலக்குழிக்குள் மனிதனை இறக்கக் கூடாது. பாதாள சாக்கடையில் மனிதனை இறக்கக் கூடாது. பாதாள சாக்கடை மற்றும் மலக்குழியில் நிகழ்ந்த மரணங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இரயில்வே துறையில் மனித கழிவை மனிதனே அகற்ற வைக்கும் கொடுமையை உடனே நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சென்னை அண்ணாசிலையில் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திங்கள்கிழமை நடைபெற்ற இந்த மறியல் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டு மேற்கண்ட கோஷங்களை எழுப்பினர்.
படங்கள்: ஸ்டாலின்nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக