திங்கள், 9 டிசம்பர், 2013

இனி டெல்லியில் ஆட்சிக்கு வருபவர்கள் தமிழர்களின் பிரச்சனைகளை கவனிப்பார்கள் ! விஜயகாந்த் புண்ணியமாம்

தேமுதிக டெல்லி தேர்தலில் போட்டியிட்டதையடுத்து இனி டெல்லியில் ஆட்சிக்கு வருபவர்கள் தமிழர்களின் பிரச்சனைகளை கவனிப்பார்கள் என்று சந்திரகுமார் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
2006 முதல் 2013 வரை ஏராளமான இடைத்தேர்தல்களை தே.மு.தி.க. சந்தித்துள்ளது. இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஒரே பாணியில் செயல்படுகின்றனர்.
ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று வாக்காளர்களை முதல்வர் ஜெயலலிதா கேட்டார். ஆனால் அது நடக்க வில்லை. அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது.
டெல்லி தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்குகளையும் பெரிதாக கருதுகிறோம். டெல்லி தேர்தலில் களத்தில் இறங்கியதே எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றிதான். இதன் மூலம் இனி டெல்லியில் ஆட்சிக்கு வருபவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை கவனிப்பார்கள்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி செயற்குழு, பொதுக்குழு கூடி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று தலைவர் விஜயகாந்த் கூறி உள்ளார். 4 மாநில தேர்தல் முடிவுகள் அந்தந்த மாநில பிரச்சினைகளின் அடிப்படையில் கிடைத்த வெற்றியாகும். பாராளுமன்ற தேர்தலிலும் இதே முடிவை எதிர்பார்க்க முடியாது என்றார்.புண்ணியமாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக