வெள்ளி, 6 டிசம்பர், 2013

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு


உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் கலப்பட பால் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் கடந்த 2011ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் நாடு முழுவதும் கலப்பட பால் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து, பாலில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், அவர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையான 6 மாத சிறைத்தண்டனை போதாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.nakkheeran.i

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக