வெள்ளி, 6 டிசம்பர், 2013

தூங்கிக்கொண்டிருந்த 5 சிறுமிகள் சுட்டுக்கொலை ! சொத்து தகராறு

பீகார் மாநிலம் கயா மாவட்டம் சோனாப் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் 5 சிறுமிகள் சுட்டுக்கொல்லப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு வியாழக்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 5 சிறுமிகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சுட்டுக்கொல்லப்பட்ட 5 சிறுமிகளும் 5 வயதிலிருந்து 13 வயதுக்கு உட்பட்டவர்கள். நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த 5 சிறுமிகளும் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சொத்து தகராறு ஒன்றில் இந்த மூன்று குடும்பத்தினர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனால் மூன்று குடும்பத்தினரும் தங்கள் பிள்ளைகளை ஒரே வீட்டில் தங்க வைத்துவிட்டு தலைமறைவானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்து புகார் கொடுத்தவர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பாரா அல்லது இருதரப்புக்கும் வேண்டாதவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக