ஞாயிறு, 1 டிசம்பர், 2013

லாக்-அப்பில் இரவை கழித்த தருண் தேஜ்பால்!

பனாஜி: பாலியல் பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்ட டெஹல்கா வார இதழின் முன்னாள் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் நேற்று இரவு போலீஸ் லாக்- அப்பில் கொலைக் குற்றவாளிகளுடன் தமது இரவைக் கழித்தார். பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்தார் தருண் தேஜ்பால் என்பது வழக்கு. கோவா ஹோட்டலில் பதிவான வீடியோ காட்சிகள் இந்த புகாரை உறுதி செய்வதால் முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கோவா நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு நேற்று இரவு வழங்கப்பட்ட உடனேயே தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார் .பின்னர் அவர் நள்ளிரவு 12.30 மணிக்கு கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார் அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் பனாஜி போலீஸ் தலைமையகத்தில் உள்ள லாக்-அப்பில் தருண் தேஜ்பால் அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்டிருந்த லாக்-அப்பில் 3 பேர் இருந்தனர். இவர்களில் இருவர் கொலைக் குற்றவாளிகள். மற்றொருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவர்.tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக