புதன், 11 டிசம்பர், 2013

முகேஷ் அம்பானியின் மகன் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ! ஆனால் வேறு ஒருவர் தானே காரை ஒட்டியதாக போலீசில் சரண்

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா முகேஷ் அம்பானியின் மகன்? மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மும்பை பெட்டார் ரோட்டில் எம்ஹெச் 01- பிகே 99 என்ற பதிவு எண் கொண்ட கருப்பு நிற ஆஷ்டன் மார்டின் கார் வேகமாக வந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் உருண்டு சென்று ஆடி கார் மீது மோதியது. பின்னர் ஆஷ்டன் மார்டினின் ஒரு டயர் கழன்று சென்று ஹுண்டாய் எலான்ட்ரா மீது மோதியது. இந்த சம்பவத்தை அடுத்து ஆஷ்டன் மார்டின் காரை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு ரிலையன்ஸ் நிறுவன டிரைவர் ஒருவர் கம்தேவி காவல் நிலையத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய காரை தான் தான் ஓட்டி வந்ததாக தெரிவித்தார். இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் பிரபல தொலைக்காட்சி சேனல் நடத்தும் ஆன்லைன் செய்தி இணையதள நிருபர்களிடம் கூறுகையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நல்ல குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தினார் என்றார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக