வியாழன், 12 டிசம்பர், 2013

விஜயகாந்த் விழாவில் பங்கேற்க தி.மு.க.,வுக்கு அழைப்பு ! தேர்தல் கூட்டணி்?

தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறுவதற்கு அச்சாரமாக, இன்று நடக்க உள்ள, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகன், சண்முக பாண்டியன், கதாநாயகனாக அறிமுகமாகும், "சகாப்தம்' படத் துவக்க விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்க வேண்டும்' என, தே.மு.தி.க., தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தே.மு.தி.க., செயற்குழு கூட்டமும், இன்று மாலை, விஜயகாந்த் தலைமையில் அவசரமாகக் கூடுகிறது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு முன், தன் தலைமையில் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என, விஜயகாந்த் விருப்பம் தெரிவித்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பலமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலை சந்தித்தால் தான், தன் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என, விஜயகாந்த் கருதுகிறார். ஏற்காடு தேர்தல் பிரசாரத்தில், விஜயகாந்துக்கு ஆதரவாக, தி,மு.க., ராஜ்யசபா தலைவர் கனிமொழி பேசியது; "விஜயகாந்த் வெள்ளை மனம் படைத்தவர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி ஆகியவை, விஜயகாந்தை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.  தி மு க வை கிழி கிழி என்று கிழித்து தோரணம் கட்டிய விஜயகாந்த் இப்போது எந்த முகத்தை வைத்து கொண்டு தி மு கவுடன் கூட்டணி வைப்பார் என்று புரியவில்லை
மேலும், தேசிய அளவில், பா.ஜ., வுடன் தி.மு.க., கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதால், தி.மு.க.,வுடன் நட்பு வைத்து, கூட்டணியில் இடம் பெற, தே.மு.தி.க., விரும்புகிறது. அதற்கு அச்சாரமாகத் தான், இன்று சென்னையில், விஜயகாந்தின், இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும், "சகாப்தம்' படத் துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என, தி.மு.க., தலைமைக்கு, தே.மு.தி.க., சார்பில் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க.,வுடன் கூட்டணியில் சேருவது குறித்தும், கட்சியில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியேறியதால், அடுத்த அவைத் தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும் விவாதிக்க, கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று மாலை, 4:00 மணிக்கு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் தலைமையி"ல் கூடுகிறது.







சினிமாவில் மீண்டும் விஜயகாந்த்?




கட்சியினர் எதிர்ப்பு: சினிமாவிற்கு இடைக்கால தடை போட்டிருந்த விஜயகாந்த், தற்போது மீண்டும் அந்த பணியைத் தொடருகிறார். தன், இரண்டாவது மகனை கதாநாயகனாக, அறிமுகப்படுத்தும் விஜயகாந்த், அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க, அரிதாரம் பூசவுள்ளார். இதற்கு, கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



இது குறித்து மாவட்டச்செயலர் ஒருவர் கூறியதாவது: கடந்த 2006 சட்டசபை, உள்ளாட்சி தேர்தல், 2009 லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல்களில், எங்கள் கைகாசை தான் செலவு செய்தோம். 2011 சட்டசபை தேர்தலுக்கு முன் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், "இந்த தேர்தலில் மட்டும் செலவு செய்யுங்கள்; அதற்கு உண்டான பலனை அனுபவிப்பீர்கள். நீங்கள் தான் அடுத்த எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்' என்ற ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, கடன் வாங்கி, தேர்தலில் செலவு செய்தோம். அ.தி.மு.க., கூட்டணி முறிந்ததால், எங்கள் கடனை அடைக்க முடியவில்லை. இந்நிலையில், தேர்தல் நிதி வசூலிக்க, கட்சியில் கெடு விதித்துள்ளனர். அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், விஜயகாந்த் தவறான முடிவெடுத்தால், எங்கள் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும். ஆனால், அதைப் பற்றி அவர் கவலைப்படாமல், சினிமாவில் கவனம் செலுத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.



நமது நிருபர் dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக