திங்கள், 9 டிசம்பர், 2013

மிசோரம் ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்


40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் 23 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளர் லால்தான்ஹாவ்லா தனது சொந்தமாவட்டமான செர்ச் சிப்பிலுள்ள, செர்ச்சிப் மற்றும் ஹராங்டுர்ஹோ ஆகிய இரு தொகுதிகளில் போட்டி வெற்றி பெற்றார், ஆட்சி அமைக்க 21 இடங்கள் போதுமான நிலையில் 23 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக