திங்கள், 9 டிசம்பர், 2013

சிதம்பரம் கோவிலுக்கு பக்தர் வழங்கிய3.50 கோடிமதிப்பிலான பவள மாலைகளை தீட்சிதர்கள்

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் அளித்த ரூ.3 கோடி பவளமாலை பற்றிய விவரம் கேட்டு தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகாய தலமாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்த இக்கோயில் பல்வேறு போராட்டங்களின் விளைவாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சில வருடங்களுக்கு முன்பு வந்தது. பூஜை, வழிபாடுகளை தீட்சிதர்களே வழக்கம்போல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் அவரது குடும்பத்தினர் சார்பில் கடந்த மாதம் 21ம் தேதி சிதம்பரம் நடராஜ பெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் அணிவிப்பதற்காக ரூ.3.50  கோடி மதிப்பிலான இரு பவள மாலைகளை காணிக்கையாக வழங்கினார்.
< இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்ட விலை உயர்ந்த பவளமணிகளைக் கொண்டு 20 பவுனில் இந்த மாலைகள் உருவாக்கப்பட்டது. இந்த பவளமாலைகள், அதன் மதிப்பு மற்றும் அதனை வழங்கிய உபயதாரர் ஆகிய முழு விவரத்தையும் பெறுமாறு சிதம்பரம் நடராஜர் கோயில் செயல் அலுவலருக்கு அறநிலையத்துறை ஆணையர் கடிதம் அனுப்பி உள்ளார். அதன்பேரில் மேற்கண்ட விவரங்களை அளிக்குமாறு நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலருக்கு கோயில் செயல் அலுவலர் முருகன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்களிடம் ஒப்படைக்குமாறு பொது தீட்சிதர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், ரூ.3 கோடி பவளமாலை குறித்து விவரம் கேட்டு தீட்சிதர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக