ஞாயிறு, 15 டிசம்பர், 2013

ஆசிரமத்திற்கு வருகைதரும் பல பெண்களிடம் உறவு வைத் துள்ளேன்


பாலியல் வழக்கில் கைதான ஆசாராமின் மகன் நாராயண்சாயி கடந்த வாரம் அரியானாவில் மாறுவேடத்தில் இருந்த போது கைதானான். பஞ்சாபியரைப்போல் வேடமிட்டு வெளிநாட் டிற்கு தப்பிச்செல்ல இருந்த நேரத்தில் அரியானா மாநில எல்லையில் பிடிபட்ட அவன் பல பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினேன் என்றும், அவர்கள் உண்மையைச் சொல்லாமலிருக்க படமெடுத்து மிரட்டினேன் என்றும் உண்மை யைக்கூறினான், இதை குஜராத் காவல் துறையினர் உறுதிசெய்துள்ளனர்.  சூரத் காவல்துறை ஆய்வாளர் ராகேஷ் அஸ்தனா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, கடந்த வாரம் வன் கொடுமை வழக்கில் கைதான ஆசாராமின் மகன் நாராயண் சாயியை காவல்துறை பொறுப்பில் எடுத்து விசாரித்தோம், அப்போது அவன் தன் மீதானகுற்றத்தை ஒப்புக்கொண்டான்

பல பெண்களிடம் உறவு
மேலும் அவர் வாக்குமூலத்தில் கூறியதாவது  நான் என்னுடைய 8 பெண் சீடர்களுடன் தொடர்ந்து உடல் ரீதியான தொடர்பிலிருந்தேன், அதில் இருவருக்கு என் மூலமாக குழந்தை பிறந்தது, அதை மறைத்து பரோடாவைச் சேர்ந்த எனது சீடர் ஒருவருக்கு எனது தந்தையின் ஆலோசனைப்படி திருமணம் செய்து வைத்தேன். ஆசிரமத்திற்கு வருகைதரும் பல பெண்களிடம் உறவு வைத் துள்ளேன். என் தந்தையின் செல்வாக்கை பயன் படுத்தி அனைவரையும் மிரட்டி வைத்துவிடுவேன், சிலர் ஒன்றும் சொல்வதில்லை, ஆனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு புகார் கூறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றான்
மேலும் தலைமறைவாக இருந்த 58 நாட்கள் எங்கு தங்கி இருந்தேன், யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதையும் கூறினான். ஒடிசா அல்லது ஆந்திரா சென்று கடல் மார்க்கமாக சிங்கப்பூர் சென்று அங்கிருந்து கனடா செல்ல திட்டமிட்டதையும் அதற்கான ஏற்பாடுகள் செய்து தருபவர் தாமதமாகிக்கொண்டு வந்ததால் பஞ்சாப் சென்று தரை மார்க்கமாக பாகிஸ் தானுக்கு செல்லும் திட்டம் இருந்ததாக கூறினார்.
நீதிமன்றம் இன்று மாலை வரை காவல் துறையின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இன்று மாலையோடு காவல்துறை பொறுப்பு முடிவதால் நாளை காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்.
viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக