திங்கள், 2 டிசம்பர், 2013

பல கொலைகள் கண்ணன் : தமிழகத்தின் மிகப்பெரிய கிரிமினல் இவன்தான் ! வர்மக்கலை காராத்தே ஜோதிடம் எல்லாம் அறிந்தவன்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper5 பேரை கொன்ற ஜோதிடர் : ரூ.3 கோடி சொத்துக்களை அபகரிக்க கள்ளக்காதலியையும் கொல்ல திட்டம்
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் கண்ணன் (43), ஜோதிடர். இவருக்கும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்த வைர வியாபாரி தங்கவேல் என்பவரின் மனைவி யமுனாவுக்கும் (44) கள்ள தொடர்பு இருந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்த தங்கவேலை 8 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் அடித்து கொன்றார். அதன்பின் யமுனாவின் மகன் செல்வகுமார், மகள் சத்யா ஆகியோரையும் கண்ணன் அடித்து கொலை செய்துள்ளார். இதற்கிடையில், தங்கவேலுவுடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நண்பர் துரைராஜுக்கும் யமுனாவின் கள்ளத் தொடர்பு தெரிய வந்தது. இதனால் துரைராஜையும் அவரது கார் டிரைவர் சக்திவேலுவையும் கண்ணன் கொலை செய்தார். இந்த 5 கொலைகள் தொடர்பாக யமுனா ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிபிசிஐடி போலீசிடம் கண்ணன் நேற்றுமுன்தினம் சரணடைந்தார்.
இந்நிலையில், கண்ணனிடம் 3 நாள் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோர்ட் அனுமதி வழங்கியது. நேற்று இரவு திருச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி. பெருமாள், டிஎஸ்பி மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் கண்ணனிடம் விடிய விடிய துருவி துருவி விசாரித்தனர். விசாரணையில் தெரிய வந்துள்ள திடுக்கிடும் தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது: கண்ணனின் தந்தை ஸ்ரீரங்கத்தில் கொல்லுபட்டறை நடத்தி வந்தார். அப்போது கண்ணன் ஊர் சுற்றி வந்துள்ளார்.

பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, கராத்தே, வர்ம கலை கற்க கேரளா  சென்றார். ஜோதிடமும் கற்றார். கேரளாவில் இருந்து வந்து பல கோயில்களுக்கு சென்று ஆன்மிகவாதியாக காட்டி கொண்டார். அப்போதுதான் 10 ஆண்டுக்கு முன்பு வைர வியாபாரி தங்கவேல் , யமுனா தம்பதியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் யமுனாவின் மேல் உள்ள மோகம் குறைந்து கண்ணன் வேறு பல பெண்களுடன் தொடர்பு வைத்தார். இதற்கு பணம் தேவைப்பட்டதால் யமுனாவின் சொத்துக்களை அபகரிக்க திட்டம் போட்டுள்ளார். யமுனா வசித்த வீட்டின் மதிப்பு ரூ.2 கோடி. தவிர திருச்சி கள்ளதெருவில் யமுனாவுக்கு ஒரு காலிமனை உள்ளது. அதன் மதிப்பு ரூ.1 கோடி. அதை விற்க முடிவு செய்து ரூ.10 லட்சம் அட்வான்ஸ் வாங்கி வந்துள்ளார். பணத் தகராறில் யமுனாவின் மகன் செல்வகுமார் மகள் சத்யாவை கொலை செய்துள்ளார். அடுத்ததாக யமுனாவின் வீட்டையும் அபகரிக்க கண்ணன் திட்டமிட்டு இருந்திருக்கிறார். யமுனா எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை வெளியூர் அழைத்து சென்று கொல்ல திட்டமிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் கந்தன் நகரில் தனியாக வசித்து வந்த லதா (48) என்பவர் கடந்த ஆண்டு ஜனவரி 23ம் தேதி கொல்லப்பட்டு கிடந்தார் இந்த கொலையும் கண்ணன் பாணியில் செய்யப்பட்டு உள்ளதால், லதாவையும் கண்ணன்தான் கொலை செய்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது. துரைராஜ், சக்திவேல் ஆகியோரை கொலை செய்த போது கண்ணனுக்கு உதவி செய்த சரவணன், 5 கொலைகளையும் பார்த்த யமுனா இருவரும் கண்ணனுடன் சேர்ந்தவர்கள். இவர்கள் அப்ரூவர் ஆனால்தான் கொலைகளை நிரூபிக்க முடியும் என்று போலீசார் கூறுகின்றனர். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=50885#sthash.UndiC2Ym.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக