திங்கள், 23 டிசம்பர், 2013

இளையராஜா தற்போது சுகமாக உள்ளார்- மருத்துவமனை நிர்வாகம்

இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததையடுத்து இப்போது அவர் சுகமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இளையராஜாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது இளையராஜாவுக்கு லேசான நெஞ்சுவலிதான் என்றும், இப்போது ஐசியுவில்ச  சுகமாக இருக்கிறார் என்றும் தெரிவித்தனர். இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் அளவு குறித்த சோதனைகள் செய்துள்ளதாகத் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக