புதன், 4 டிசம்பர், 2013

கள்ளுக்கு தடை சாராயத்திற்கு வரவேற்பு ! டாஸ்மாக் அரசுக்கு எதிராக கள் இயக்கம் போராட்ட அறிவிப்பு


திருச்சி:திருச்சியில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் கள்ளுக்கு தடை இல்லை. தமிழக அரசால் விதிக்கப்பட்டிருக்கும் இந்த தடை உலகளாவிய நடைமுறைக்கு எதிரானது. மதுவிலக்கு மற்றும் மதுக் கொள்கையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட எந்த ஒரு குழுவும் கள்ளுக்கு தடை விதிக்க சொல்லி அரசுக்குப் பரிந்துரைக்க வில்லை.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நோக்கில் கள் இறக்குவதும், குடிப்பதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை என்ற அடிப்படையில் வரும் ஜனவரி 21ம் தேதி தமிழகம் முழுவதும் பனை மற்றும் தென்னையில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்த கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு எந்த தடை வந்தாலும் தடையை மீறி கள் இறக்கி விற்பனை செய்யப்படும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக