புதன், 4 டிசம்பர், 2013

போராடி மீட்ட சிதம்பரம் கோவில் மீண்டும் தீட்சதர்களிடமே செல்கிறது ? பார்பன ஆட்சியில் இதுவும் நடக்கும் ?

ஆறுமுகசாமி போஸ்டர்
சுப்பிரமணிய சாமி, உச்சநீதிமன்றம்தமிழக அரசு நிர்வாக அதிகாரியை வாபஸ் பெறா விட்டால், நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்” என்று சுப்பிரமணியசாமி பேட்டியளித்திருக்கிறார்.
ன்பார்ந்த தமிழ் மக்களே,
போராடி மீட்டெடுக்கப்பட்ட தில்லைக்கோயில், மீண்டும் தீட்சிதர்களின் பிடிக்கே சென்று விடாமல் தடுக்கும் பொருட்டு, உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்தின் மக்கள் மன்றத்திலும் விடாப்பிடியாகப் போராடி வருகிறோம்.
ஜெயலலிதா அரசும், சுப்பிரமணிய சாமியும், தீட்சிதர்களும் இணைந்த பார்ப்பனக் கூட்டணிக்கு எதிராகப் போராட உங்களை அறைகூவி அழைக்கிறோம்.
ஜெயலலிதா அரசு கோயிலிலிருந்து அறநிலையத்துறை அதிகாரியை வெளியேற்றப் போகிறது என்று சுப்பிரமணியசாமி அறிவித்தவுடன், திங்கள்கிழமை காலை சிவனடியார் ஆறுமுகசாமியுடன் எமது வழக்குரைஞர்களும் உறுப்பினர்களுமாக 30-க்கும் மேற்பட்டோர் தில்லைக் கோயிலுக்குள் சென்றனர். “தில்லைக்கோயிலை தமிழக அரசு தீட்சிதர் வசம் ஒப்படைத்தால் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியபடியே உயிர் துறப்பேன்” என்று அறிவித்தார் ஆறுமுகசாமி. கொட்டும் மழையில் அவர் வழிபாடு தொடங்கியது, போராட்டமும்  தொடங்கியது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு தோழர்கள் சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுச் சொத்தான கோயிலை தீட்சிதரின் தனிச் சொத்தாக மாற்றுவதற்கு அறநிலையத்துறை ஆணையர் தீட்சிதர்களோடு சேர்ந்து நடத்தும் கூட்டுச் சதியை இப்போராட்டம் கேள்விக்குள்ளாகியது. ஆணையரிடமிருந்து பதில் இல்லை. போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டங்களின் விளைவாக அரசாணையை திரும்பப் பெறும் தனது சூழ்ச்சியை மறைத்துக் கொண்டு சுப்பிரமணிய பிரசாத் என்ற கூடுதல் அட்வகேட் ஜெனரலை நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது தமிழக அரசு.
“தமிழக அரசு வாதாடியது” என்று கணக்கு காட்டுவதற்காக அவர் நேற்று பதினைந்து நிமிடம் நேரம் நீதிமன்றத்தில் பேசினார். அவ்வளவுதான். ஆனால்  “TN Justifies appointment of E.O for Chidambaram temple” என்று தலைப்பு போட்டு இந்து நாளேட்டில் இன்று செய்தி வெளி வந்திருக்கிறது. தீட்சிதர்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு காட்டியதைப் போல ஒரு நாடகம்!

நேற்று முழுவதும் தீட்சிதர்களுக்கு எதிராக சத்தியவேல் முருகனார் சார்பில் மூத்த வழக்குரைஞர் துருவ் மேத்தா வாதாடியிருக்கிறார். நேற்று மாலை ஆறுமுகசாமியின் சார்பில் காலின் கன்சால்வேஸ் தனது வாதுரையைத் துவக்கியிருக்கிறார். இன்று நீதிமன்றம் இல்லை. நாளை வழக்கு விசாரணை தொடர்கிறது. காலின் தனது வாதத்தை தொடர்வார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஒரு வழக்குரைஞர் குழு டெல்லியில் முகாமிட்டு மூத்த வழக்குரைஞர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்றி வருகிறது.
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, “தமிழக அரசு நிர்வாக அதிகாரியை வாபஸ் பெறா விட்டால், நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்” என்று சுப்பிரமணியசாமி இந்து நாளேட்டிற்கு பேட்டியளித்திருக்கிறார். இதனையொட்டி சாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரவிருக்கிறோம்.
ஜெயலலிதா அரசும், சுப்பிரமணிய சாமியும், தீட்சிதர்களும் இணைந்த பார்ப்பனக் கூட்டணிக்கு எதிராகப் போராட உங்களை அறைகூவி அழைக்கிறோம்.
திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்று கொண்டவர்களும், கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாகக் கூடாது என்ற அக்கறை கொண்டவர்களும், ஆலயத் தீண்டாமையை எதிர்ப்பவர்களும், தமிழ் வழிபாட்டை ஆதரிப்பவர்களும் தமிழக அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் சுயமரியாதைப் பாரம்பரியத்தையும், தமிழ் உணர்வையும் எதிர்த்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகனும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்களும் வெற்றி பெறுவதை நாம் அனுமதிக்க கூடாது.  கோயிலை இந்து அறநிலையத்துறையின் வசம் ஒப்படைப்பதற்கு எதிராக சாத்தியமான வழிகளில் எல்லாம் குரலெழுப்புங்கள் என்று அனைவரையும் கோருகிறோம்.
பெற்ற வெற்றியைப் பறி கொடுத்து விடக்கூடாது என்பதற்காக, பெரும் தொகையைக் கடன் வாங்கி,  வழக்கை முன்னெடுத்துச் செல்கிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். செலவுகளை சமாளிப்பதற்கு வழக்கு நிதி கோருமாறு டில்லியிலிருந்து கோரிக்கை அனுப்பியிருக்கிறார் வழக்குரைஞர் ராஜு.
கீழ்க்கண்ட எமது வங்கிக் கணக்கிற்கு வழக்கு நிதியை அனுப்பி விட்டு, மின் அஞ்சல் வாயிலாக விவரத்தை தெரிவிக்கவும். நீங்கள் அனுப்பும் நன்கொடைக்கு ரசீது அனுப்பப்படும்.
நன்றி.
வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக