திங்கள், 2 டிசம்பர், 2013

கமல் :பாலச்சந்தர் திட்டினால் ஸ்ரீப்ரியாவும் நானும் அழவே மாட்டோம்

இசை வெளியிட்ட பிறகு கமல் பேசியபோது “ மாலினிக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீப்ரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.என்னைப் பார்த்து கவிதை, நடனம் கற்றதாக சொன்னார்கள். அவர்கள் மிகப்பெரிய கலைக்குடும்பத்திலிருந்து வந்த பெரும் திறமையாளர்களின் மகள் அவர். திறமை இருப்பவர்கள் தான் அடக்கமாக இருப்பார்கள். பாலச்சந்தர் தான் எங்களை உருவாக்கினார். பாலச்சந்தர் எவ்வளவு பெரிய சாதனையாளர் என்பது எங்கள் படங்களைப் பார்த்தால் தெரியும்.ஐயா(பாலச்சந்தர்) நினைவுகூர்ந்த நிகழ்வுகள் எனக்கும் நினைவிருக்கிறது. பாலச்சந்தர் ஐயா திட்டினால் நாங்கள் அழவே மாட்டோம். நான் கல்லூலிமங்கன், ஸ்ரீப்ரியா கல்லூலிமங்காள். செய்த தவறுக்காக திட்டினால் ஏன் அழவேண்டும். பாலச்சந்தரின் இதயம் பலவீனமானதற்கு நாங்கள் தான் காரணம். நாங்கள் அவருக்குக் கொடுத்த தொந்தரவுகள் அதிகம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் அனுபவித்த கஷ்டங்களைப் பார்த்து தான் நான் கொஞ்சம் தாமதமாக இயக்குனரானேன்” என்று பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக