திங்கள், 2 டிசம்பர், 2013

வைகுண்டராஜனுக்கு மத்திய அரசு விருது ! ஏனுங்க சந்தன கடத்தலுக்கும் ஏதாவது விருது உண்டுங்களா ?


சென்னை: தொடர்ந்து சர்ச்சைகளிலேயே சிக்கித் தவித்து வரும் வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு இது பெரும் ஆறுதல் செய்தி என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிறுவனத்துக்கு டாப் எக்ஸ்போர்ட்டர் அதாவது முன்னணி ஏற்றுமதியாளர் என்ற விருதை மத்திய அரசு வழங்கிக் கெளரவித்துள்ளது தாது மணல் கொள்ளை விவகாரங்களில் விவி மினரல்ஸின் பெயர் தொடர்ந்து அடிபடுகிறது. அதிமுக தரப்புக்கு மிகவும் வேண்டியவர் வைகுண்டராஜன் என்ற சர்ச்சையும் நீடித்தபடியே உள்ளது இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் சில மாதங்களுக்கு முன்பு போலீஸாரும், அதிகாரிகளும் அதிரடி சோதனையும் நடத்தினர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவிமினரல்ஸ்தான் முக்கிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் சர்ச்சைக் கண்களில் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் மத்திய அரசின் டாப் எக்ஸ்போர்ட்டர் விருது இந்த நிறுவனத்திற்குக் கிடைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது  tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக