திங்கள், 2 டிசம்பர், 2013

மறைந்த நடிகை சௌந்தர்யாவின் 100 கோடி சொத்து வழக்கு சமரசம்


நடிகை சவுந்தர்யாவின் சொத்து விவகாரம்... உயிலில் தொடரும் மர்மம்!பெங்களூர்: விமான விபத்தில் பலியான நடிகை சவுந்தர்யாவின் பல கோடி ரூபாய் சொத்துக்களை சுமூகமாகப் பிரித்துக் கொள்ள அவரது உறவினர்கள் முடிவு செய்து, நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், இந்த விவகாரத்தில் சவுந்தர்யா எழுதியதாகக் கூறப்பட்ட உயில் விவகாரத்தில் மட்டும் மர்மம் தொடர்கிறது ரஜினி, கமல், அமிதாப் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து, தென்னிந்திய சினிமாவில் உச்சத்திலிருந்தவர் சவுந்தர்யா. புகழோடும் நிறைய வாய்ப்புகளோடும் இருந்த போதே திருமணம் செய்து கொண்டு, பாரதிய ஜனதா கட்சியிலும் இணைந்தார். 2004-ம் ஆண்டு கட்சிப் பிரச்சாரத்துக்காக செஸ்னா விமானத்தில் கிளம்பிய சவுந்தர்யா, அடுத்த சில நிமிடங்களில் விமானம் வெடித்து பலியானார். அவருடன் சென்ற சகோதரர் அமர்நாத்தும் இந்த விபத்தில் பலியானார். இருப்பதை விட்டுவிட்டு bjp யுடன் பறந்ததில் ஏற்பட்ட விபத்து மரணம் 

ரூ 100 கோடி சொத்து
மறைந்த சவுந்தர்யாவுக்கு பெங்களூர் மற்றும் ஹைதராபாதில் ரூ 100 கோடிக்கு சொத்துகள் உள்ளன (அவர் இறந்தபோது இவற்றின் மதிப்பு ரூ 100 கோடி என்று கூறப்பட்டது). வீடுகள், கடைகள், விவசாய நிலங்கள் ரொக்கம் மற்றும் தங்க வைர நகைகள் இதில் அடங்கும்.
சொத்து தகராறு
சொத்து என்று வந்த பின் தகராறு இல்லாமலா... சவுந்தர்யா மற்றும் அவர் சகோதரர் பலியான பிறகு, அவர் குடும்பத்தில் மிஞ்சியிருந்தவர்கள் அம்மா மஞ்சுளா, கணவர் ஜிஎஸ் ரகு, அமர்நாத்தின் மனைவி நிர்மலா மற்றும் மதன் சாத்விக்.
இவர்களில் ஜி எஸ் ரகு மறுதிருமணமே செய்து கொண்டார். ஆனால் சவுந்தர்யாவின் அம்மாவுடன் கைகோர்த்துக் கொண்டு சவுந்தர்யா சொத்துக்காக மல்லுக்கட்டினார்.
சாத்விக் மனு
இறப்பதற்கு முன் சவுந்தர்யா ஒரு உயிலை எழுதியதாகவும், அதன்படி சொத்துகளில் தனக்கு சேரவேண்டியதைத் தரவேண்டும் என்று சாத்விக் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். மேலும் மஞ்சுளாவும், ஜிஎஸ் ரகுவும் தன்னைத் மிகவும் துன்புறுத்தியதாகவும் கூறி சாத்விக்கின் அம்மா நிர்மலாவும் புகார் தந்தனர்.
சவுந்தர்யா உயில்
சவுந்தர்யா எழுதியதாகச் சொல்லப்பட்ட உயிலை அவரது தாயாரும் கணவரும் ஏற்க மறுத்தனர். மேலும் இது நிர்மலா - சாத்விக்கின் வக்கீல் தன்ராஜ் என்பவரால் போர்ஜரி செய்யப்பட்டது என்று கூறினர். இதை கடுமையாக எதிர்த்த தன்ராஜ், இது தொடர்பாக மஞ்சுளா மற்றும் ரகு மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.
சமரசம்
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், இப்போது சவுந்தர்யாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வக்கீல் உள்பட அனைவரும் சமாதான உடன்பாட்டுக்கு வந்துவிட்டனர்.
சொத்துப் பிரிப்பு
இதன்படி, சவுந்தர்யாவின் அண்ணன் மனைவி மற்றும் மகனுக்கு சில சொத்துகளை விட்டுக் கொடுத்துள்ளார் மஞ்சுளா. ஹனுமந்த் நகரில் உள்ள ஒரு வீடு, இரண்டு கடைகள் உள்ளடக்கிய சொத்து மற்றும் ரூ 25 லட்சத்தை சாத்விக் பேரில் மாற்ற மஞ்சுளாவும் ரகுவும் ஒப்புக் கொண்டுள்ளனர். அதே போல நிர்மலாவுக்கு ரூ 1.25 கோடியைத் தரவும் ஒப்புக் கொண்டனர். அமர்நாத் பெயரில் ஆந்திராவில் உள்ள விவசாய நிலங்களை விற்று அந்தப் பணத்தை மஞ்சுளா, நிர்மலா, சாத்விக் ஆகிய மூவரும் சமமாகப் பிரித்துக் கொள்ள உடன்பாடு செய்துகொண்டுள்ளனர்.
நிர்மலா கூட்டு உரிமையாளராக உள்ள மற்ற சொத்துக்களிலிருந்து தன்னை விலகிக் கொள்ளவும் சம்மதித்துள்ளார்.
வழக்குகள் வாபஸ்
இதற்கு பதிலாக, மஞ்சுளா மற்றும் ரகு மீது நிர்மலாவும் சாத்விக்கும் தொடர்ந்துள்ள அத்தனை வழக்குகளையும் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு நிர்மலாவும் சாத்விக்கும் சம்மதித்து, அந்த மனுவை நீதிமன்றத்திலும் சமர்ப்பித்துள்ளனர். மேலும் வக்கீல் போர்ஜரி செய்ததாக கூறப்பட்ட அவதூறை மஞ்சுளா - ரகுவும், அதை எதிர்த்து தொடர்ந்த அவதூறு வழக்கை வக்கீலும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக பரஸ்பரம் எழுதிக் கொடுத்துவிட்டனர்.
ஆக எல்லாம் சுமூகமாக முடிந்துவிட்டது.
அந்த உயில் என்னாச்சு?
ஆனால் சவுந்தர்யாவின் உயில் என்று சொல்லப்பட்ட பத்திரம் என்ன ஆயிற்று என்பதுதான் இப்போதைய கேள்வி. அந்த உயில் மெய்யானதா... போர்ஜரியா என்பது குறித்து இரு தரப்பும் வாயே திறக்கவில்லை. இந்த உயில் தொடர்பாக வந்த மனுவை ஏற்ற நீதிமன்றமும் இதுகுறித்து கேள்வி எழுப்பவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக