சனி, 14 டிசம்பர், 2013

ப.சிதம்பரம் :லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை் கிடைக்காது.!

மும்பை: லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மையும் கிடைக்காது..அப்படி அமையும் ஆட்சியும் நிலையாக இருக்காது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய சிதம்பரம். நாம் தேர்தலுக்காக காத்திருக்கிறோம். லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கும் என்று என்னால் நிச்சயமாகக்கூற முடியவில்லை. அதேபோல் நிலையான ஆட்சியும் அமைந்துவிடாது. இந்திய ஜனநாயகம், சிக்கலான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.நமது அரசு நிர்வாகத்துக்கு, சில அமைப்புகளிள் எல்லை மீறுதல் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. நாடாளுமன்றமே கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிப்போகிறது. நமது பிரச்சினைகளுக்கு நீதித்துறை மூலமாக தீர்வு கண்டுவிட முடியும் என்று தவறான, கவர்ச்சிகரமான கருத்து நிலவுகிறது. அரசாங்கத்தின் மூன்று கிளைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது அவசியமான முன்நிபந்தனை. நாம் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சுதந்திர இந்திய வரலாற்றின் மிக மோசமான முனையில் நின்றுகொண்டிருக்கிறோம். நாம் அதில் இருந்து கடந்து வர வேண்டும் என்றார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக