புதன், 4 டிசம்பர், 2013

அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராகுல் கடும் முயற்சி ? ஜெயாவின் கூட்டணி Flashbacks கொஞ்சம் பாருங்க ! உருப்படவிடமாட்டாய்ங்க ! பச்சோ


சென்னை: தமிழகத்தில் இலை கட்சி தலைமையிலான கூட்டணி அமைப்பதற்கான அனைத்து வித முயற்சிகளையும் காங்கிரஸ் துணைத் தலைவரான இளவரசர் ராகுல் காந்தி மேற்கொண்டுவருவதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. அண்மையில் கோட்டை தலைமை ஒரு முக்கியமான சந்திப்பை மேற்கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அந்த சந்திப்பால் அமைச்சரவையில்பெரிய மாற்றம் இருக்கும் என்றே தகவல்கள் பரவின. ஆனால் அப்படிஒன்றும் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றவில்லை. கடந்த சில மாதங்களாகவே அந்த அதிமுக்கிய நபரை மையமாக வைத்து வலம் வரும் கூட்டணி விவகாரம்தான் இப்போதைய சந்திப்பிலும் பிரதானமாக இருந்ததாக சொல்லப்படுகிறது ஜெயலிதாவுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்று நிறைய பேரை கேட்டு தெரிந்து கொள்ளலாம் ஆனால் ராகுல் கேட்கிற ஆள் இல்லையே !அதனால்  தெரிய வாய்ப்பில்லை அவரு சின்ன புள்ளே ! பட்டு தெளியட்டும் 
. இலை தலைமையிலான கூட்டணிக்கு பகீரத பிரயத்னம் செய்யும் இளவரசர் ராகுல்! தமிழகத்தைப் பொறுத்தவரையில் இலைக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி இப்போது நினைக்கிறாராம். முன்பு முரசு கட்சியாரை அரவணைத்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்த ராகுலுக்கு அந்த கட்சியால் பெரிய அளவில் லாபம் இல்லை என்று சில புள்ளிவிவரங்களை காங்கிரஸில் உள்ள இலை ஆதரவு லாபி முன்வைத்திருக்கிறதாம். இதைத் தொடர்ந்து வேறுவழியில்லை.. தந்தை வழியில் இலையுடன் இணக்கமாக போய்விடுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம். ஆனால் தமிழகத்தில் இலை தலைமையுடன் பேசக் கூடிய காங்கிரஸ் தலைவர் எவருமே இல்லை என்பதுடன் எவருமே தயாராக முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இலை தலைமையுடன் இணக்கமாக இருக்கும் அதிமுக்கிய தலைவரையே இந்த கூட்டணிக்கும் தூதுவராக்கியிருக்கிறாராம் ராகுல். ஆனால் இலை தலைமையோ, இத்தனை அலட்சியத்துக்கும் அவமானத்துக்கும் பிறகும் உங்களோடு கூட்டணி வைத்தால் எப்படி சரி வரும் என்று எதிர்கேள்வி போட ஜெர்க் ஆகி நிற்கிறதாம் காங்கிரஸ். அந்த வழக்கு, இந்த வழக்கை காட்டியாவது பணியவைக்கலாம் என்றெல்லாம் கூட கோட்டிடும் காட்டியதாம் டெல்லி மேலிடம்.. நாங்க பார்க்காத வழக்கா என்ற தொனியில் நமுட்டு சிரிப்புடன் விடை கொடுத்ததாம் இலை தலைமை. இருந்தாலும் இழவு காத்த கிளியாக தேர்தல் முடிந்த பின்னராவது இலை தலைமை வந்துவிடும் என்று இளவரசர் ராகுல் காத்திருக்கிறாராம்!
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக