புதன், 4 டிசம்பர், 2013

தருண் தேஜ்பாலும் சோமா சௌத்ரியும் ஏற்கனவே ஒரு ரோமன்ஸ் நட்பில் இருந்தவர்களா ? benefit of doubt

குஜராத் கலவர உண்மைகளையும் பாஜகவின் ஆயுதபேர ஊழல்களையும் இன்னும் இது போல பலவித சமுக குற்றங்களை மிக துணிவோடு அம்பலபடுத்தியதில் தருண் தேஜ்பால் ஏராளமான எதிரிகளை சம்பாதித்துள்ளது யாவரும் அறிந்ததே. அவர் தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு இந்தியாவை மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களை உலுக்கி உள்ளது என்றே கூறவேண்டும்.
மிக வேகமாக ஆக்கிரோஷத்தோடு tehelka ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பலரும் சேறு வாரி தூற்றுவதை நாம் காண்கிறோம்
அவர்களின் அந்தரங்கம் மீது சந்தேகம் வருவது தவிர்க்க முடியாதது ,
குற்றம் சாட்டி உள்ள சக பத்திரிகையாளரான சோம சௌத்ரி அவர்கள் தருண் தேஜ்பால் உடன் பல ஆண்டுகள் ஒன்றாக பணியாற்றி உள்ளார்கள்.
வயது வித்தியாசம் இருந்தாலும் மிகவும் நட்புடன் இருந்திருக்கிறார்கள்.
இருவருக்கும் இடையில் உள்ள உறவு சக பத்திரிகையாளர்கள் என்பதையும் தாண்டி ஒரு ஆண் பெண் நட்பு அல்லது அதற்கும் மேலாக சில எல்லைகளை கடந்திருக்க கூடிய வாய்ப்பு இருந்திருக்கலாம். அதாவது கடந்த காலங்களில் . தற்போது அந்த கொடுக்கல் வாங்கல்கள் அற்று போய் இருக்கலாம் . வெறும் ஊகத்தின் அடிப்படையில் இந்த கருத்து சொல்லப்பட்டதாக தோன்றக்கூடும்,
இதுவரையில் தருண் ஒரு காமவெறி பிடித்தவராகவோ அல்லது ஒரு கிரிமினல் ஆகவோ இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை,
மிக அதிகமாக பழக கூடிய வாய்ப்பு உள்ள ஒரு ஆணும் பெண்ணும் சம்பத்தப்பட்ட விடயம் இது , வெறும் தெருவில் நடந்து சென்ற பெண்ணாய் பாலியல் பலாத்காரம் செய்வது போல பலர் இதை சித்தரிக்கிறார்கள் . உண்மையில் இது ஒரு நீண்ட காலத்து கதையாக இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. நடந்ததாக கூறப்படும் சம்பவம் ஒரு காதலர்களின் ஊடல் தகராறாக இருப்பதற்கு சான்ஸ் உண்டா இல்லையா ? கோபம் கொண்ட பெண்ணின் சாதுர்யமான செய்கையாகவும் கூட இதை நோக்கலாம் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக