வெள்ளி, 29 நவம்பர், 2013

Traffic லஞ்சப்பணம் 22 ஆயிரம் கோடி ரூபாய் நெடுஞ்சாலைகளில் புரளுது

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள சாலைகளில், ஓராண்டில், காவல் துறையினர், போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளால், 22 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சப் பணம் பெறப்படுவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது லஞ்சம் குறித்து ஆய்வு: 'சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ்' என்ற அமைப்பைச் சேர்ந்த, ஊடகவியல் துறை கல்வியாளர்கள், சாலைப் போக்குவரத்தில் நிகழும் லஞ்சப் பரிமாற்றம் பற்றி ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்விற்காக, டில்லி, மும்பை, கோல்கட்டா, இந்தூர், பெங்களூரு, ஆமதாபாத், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், சாலைகளில் சென்ற லாரி டிரைவர்களிடம் அவர்கள் கருத்து கேட்டுள்ளனர். அப்போது, டிரைவர்கள் கூறியதாவது: போக்குவரத்து போலீசார் மற்றும் காவல் துறையினர், அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபடுவர். அனுமதிக்கப்பட்ட அளவு எடையை ஏற்றிச் சென்றாலும், அபராதம் என்ற பெயரில், எங்களிடம் இருந்து பணம் வசூல் செய்வர்.ரோட்டோர உடுப்பு அணிந்த பிச்சை காரர்களை திருத்த முடியாது, ஒரு சிலரே மிக நல்லவர்களாக அவர்கள் பணியை செய்து கொண்டு இருக்கின்றனர், பெரும்பான்மையோர் திருடர்களாக தான் இருகின்றனர்



பொய் ரசீது:

அதற்கான சரியான ரசீது கொடுக்கப்படுவதில்லை; அப்படியே கொடுத்தாலும், அது சில நேரங்களில், பொய்யான ரசீதாகவே இருக்கும். தாங்கள் வழங்கிய ரசீதுகளை அடையாளம் காண, போலீசார், பல, சங்கேத வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். அவர்கள் கொடுக்கும் ரசீதுகளில், 'ஏப்ரல் பூல்'- 'மே டே' - 'இன்டிபென்டன்ஸ் டே' என்பன போல், எழுதியிருந்தால், அது போலீசார் வழங்கிய, பொய் ரசீது என்பதை மற்ற போலீசார் எளிதில் அடையாளம் கண்டு கொள்வர். அவர்கள், மீண்டும் அபராதம் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவர். அனைத்து சான்றிதழ்களும், ஆதாரங்களும் இருந்தாலும், அதிக வேகத்தில் சென்றதாகக் கூறி, பணம் வசூலிப்பர். சாதாரண போலீசாரும், பல நேரங்களில் எங்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். இவ்வாறு டிரைவர்கள் கூறியுள்ளனர்.

அவர்களே எடுத்துக்கொள்வர்:

இந்த ஆய்வின் முடிவில், சாலை விதி மீறல்களில் வசூலிக்கப்படும், அபராதங்களில், 60 சதவீதம் சட்ட விரோதமான முறையில் வசூலிக்கப்படுவதாகவும், அவற்றில், 90 சதவீத தொகை, போக்குவரத்து போலீசார், காவலர்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுத்துக் கொள்வதும் தெரிய வந்துள்ளது. இந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும், 22 ஆயிரம் கோடி ரூபாய், சாலைகளில் லஞ்சமாக பெறப்படுவதாக, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக