சனி, 9 நவம்பர், 2013

ப்பா... யார்ரா அது பேய் மாதிரி’ காயத்ரியிடம் கலாய்ப்பு

சென்னை:‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்திருப்பவர் காயத்ரி. தற்போது பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். நடுவுல கொஞ்சம்... படத்தில் அவர் திருமணத்துக்காக ஓவர் மேக்கப்போட்டு வந்து மேடையில் நிற்கும்போது அருகில் நிற்கும் விஜய்சேதுபதி அவரைப் பார்த்து ப்பா யார்ரா அது பேய் மாதிரி இருக்கு என்று அதிர்ச்சி அடைந்து வசனம் சொல்வார். அடிக்கடி இந்த வசனத்தை > சொன்னதால் பிரபலம் ஆனது. அதுவே இப்போது காயத்ரிக்கு தலைவலியாகிவிட்டது. புதிய படங்களின் விழாக்கள் அல்லது ஷாப்பிங் செல்லும்போது அவரை பார்க்கும் ரசிகர்கள் ‘ப்பா...‘ என்று சொல்லி கிண்டல் செய்கின்றனர். சில சமயம் அதை காதில் கேட்டும் கேட்காததுபோல் சென்றுவிடுவார். சில சமயம் லேசாக புன்னகை புரிந்துவிட்டுகோபத்தை அடக்கிக்கொண்டு சென்றுவிடுகிறார்.>பொது இடங்களில் ‘ப்பா‘ என்று ரசிகர்கள் கிண்டல் செய்யும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்றதற்கு காயத்ரி பதில் அளித்தார். ‘ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. பல இடங்களில் என்னைப்பார்த்து ப்பா என்று சொல்வதால் எனக்கு கோபம் வருவதில்லை. என்னை அடையாளம் காட்டும் வசனமாகவே அதை எடுத்துக்கொள்கிறேன்‘ என்று நமட்டு சிரிப்புடன் சொல்லி விட்டு நகர்ந்தார். tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக