சனி, 9 நவம்பர், 2013

எம்.பி. வீட்டில் இறந்த பெண்ணின் உடல் கேட்பாரின்றி பிணவறையில் காத்திருக்கும் அவலம்


எம்.பி. வீட்டில் இறந்த பெண்ணின் உடல் கேட்பாரின்றி பிணவறையில் காத்திருக்கும் அவலம்உ.பி. மாநிலம் ஜான்பூர் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனஞ்செய் சிங்கின் டெல்லி வீட்டில் வேலை பார்த்த ராக்கி என்ற பெண் கடந்த திங்கட்கிழமை மாலை மர்மமான முறையில் மரணமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராக்கியின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் மீனா என்ற பெண்ணும் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் கம்பி மற்றும் குச்சியால் அடிக்கப்பட்டுள்ளனர் என்று பின்னர் நடந்த பல்வேறு விசாரணையில் தெரியவந்தது. இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட எம்.பி. தனஞ்செய் சிங் மற்றும் அவரது மனைவி டாக்டர் ஜக்ரிதி சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சாட்சிகளின் விசாரணை அடிப்படையில்,  ஜக்ரிதி சிங் மரணம் விளைவிக்கும் விதத்தில் அடித்ததால், ராக்கி மரணமடைந்து இருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.


மேலும் இந்த அறிக்கையின் முழு விபரங்களையும் போலீசார் கூற மறுத்துவிட்டனர். இதனிடையே, கடந்த வியாழன் முதல் ராக்கியின் வளர்ப்பு மகனும் தலைமறைவாகியுள்ளார். அவர், இந்த மரணம் குறித்து புகாரும் செய்யவில்லை. சாட்சியாகவும் இருக்கவில்லை.

இதனால் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ராக்கியின் உடல் பிணவறையிலேயே ஒருவாரமாக கேட்பாரின்றி காத்து கிடக்கிறது. ராக்கியின் முழு விபரங்களை அறியும் பொருட்டு போலீசார் குழு, கொல்கத்தா சென்றிருப்பதாக கூறப்படுகிறது.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக