சனி, 30 நவம்பர், 2013

ஸ்டாலினின் வாயில் தமிழ் மொழி படும் பாடு ! சொல்லக்கூடிய இருக்கக்கூடிய .....

திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது எமக்கு எந்தவிதமான கோபமும் கிடையாது , ஆனால் அவரின் தமிழ் பேச்சில் எமக்கு பெரும் ஆட்சேபம் உண்டு,
யாரும் இதுவரை இவரின் தமிழ் இலக்கண பிழைகளை சுட்டிகாட்டியதாக் தெரியவில்லை , முதலமைச்சர் ஜெயலலிதா மீது நாம் என்னதான் குறையை கண்டாலும் அவரின் தமிழ் மொழி உச்சரிப்பிலோ இலக்கணத்திலோ எதுவித குறையும் காணமுடியாது, ஏன் குஷ்பு கூட தற்போது நல்ல தமழ் பேசுகிறார்,
ஆனால் ஸ்டாலினோ எப்போதும் அடிப்படையில் மிகவும் தவறாக தமிழை பேசுகிறார் .
உதாரணமாக தமிழக முதலைமச்சர் ஜெயலலிதா என்று சொல்லவேண்டிய இடத்தில் ஸ்டாலின் சொல்வார்: இன்று தமிழக முதலமைச்சராக இருக்க கூடிய ஜெயலலிதா அவர்கள் என்று சொல்வார் 
அல்லது இன்னும் சரியாக சொல்ல போனால் உதாரணமாக, பிரதமர் மன்மோகன் சிங் என்று கூறவேண்டிய இடத்தில் இவர் சொல்வார் பிரதமராக இருக்ககூடிய அல்லது சொல்லக்கூடிய மன்மோகன் சிங் என்று சொல்வார்.
பிரதமரை பிரதமர் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர பிரதமாராக இருக்கக்கூடிய அல்லது சொல்லக்கூடிய என்று சொதப்ப கூடாது.
நாங்கள் எதோ உங்கள் மீது வெறுப்பினால் இதை சொல்ல வில்லை .அய்யா கலைஞரிடம் கேட்டாவது இந்த தவறை திருத்தி கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக