வெள்ளி, 8 நவம்பர், 2013

அரசு பங்களாக்களை இடித்து மாளிகை கட்டினார் மாயாவதி !

புதுடில்லி : உ.பி., முன்னாள் முதல்வரும், மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடர்பாடு வரும் நேரமெல்லாம் காப்பாற்றும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான, மாயாவதிக்கு, சட்ட விதிகளை மீறி, டில்லி, வி.வி.ஐ.பி., பகுதியில், மூன்று பெரிய பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நாட்டின் அதிக பாதுகாப்பு மிக்க பகுதியான, டில்லியின், லுட்யன்ஸ் பங்களா பகுதியில், மாயாவதிக்கு ஏற்கனவே, குருத்வாரா ரகாப்கஞ்ச் சாலையில், 4ம் எண் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி., அந்தஸ்தில் உள்ள அந்த பங்களாவிற்கு, பாதுகாவலர்கள், வேலையாட்கள், தோட்டத்தொழிலாளர்கள் என, 15க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இந்நிலையில், 4ம் எண் பங்களாவை விட, சற்று பெரிய அளவிலான பங்களாக்கள், 12, 14 மற்றும் 16, மாயாவதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றும் தனித்தனியாக இருந்த பங்களாக்கள், மாயாவதிக்காக, ஒரே பங்களாகவாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.ஒரு சிறிய கிராமம் அளவிற்கு, மாயாவதியின் பங்களா மாற்றப்பட்டுள்ளது. லுட்யன்ஸ் பங்களா பகுதியில் உள்ள கட்டடங்களில், ஒரு செங்கல்லைக் கூட, அனுமதியில்லாமல் மாற்ற முடியாது. ஆனால், மாயாவதிக்காக, மூன்று பங்களாக்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.இப்போது, ஒரே பங்களாகவாக மாற்றப்பட்டுள்ள, மாயாவதியின் பங்களாவின் பரப்பு, லோக்சபாவில், எம்.பி.,க்கள், அதிகாரிகள், உதவியாளர்கள் என, 500 பேர் உட்காரக்கூடிய, மெயின் சேம்பர் அளவை விட பெரிது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தகவல் ஆர்வலர் ஒருவர் பெற்றுள்ளார். அந்த மூன்று பங்களாக்களும் ஒன்றிணைந்த, ஒரே பங்களாவில், மாயாவதி தங்குவதில்லை. அவர், 4ம் எண் பங்களாவில் தான் வசிக்கிறார்.இந்த பங்களா, பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர், கன்ஷி ராம் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள, 'பகுஜன் அறக்கட்டளை'க்கு வழங்கப்பட்டுள்ளது.சாதாரண ஆசிரியையாக அரசியலில் ஈடுபட்ட மாயாவதி, குறுகிய காலத்தில், பல நூறு கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாகியுள்ளார். அவரின் உறவினர்கள், உலகம் முழுவதும், பலவிதமான தொழில்களைச் செய்து வருகின்றனர். உ.பி.,யில் முதல்வராக இருந்த போது, மாயாவதி, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில், கன்ஷிராமுக்கு மண்டபங்கள், நினைவிடங்கள், பூங்காக்கள் கட்டியது குறிப்பிடத்தக்கது. dinamalar.,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக