வெள்ளி, 8 நவம்பர், 2013

கந்து வட்டியால் குடும்பமே தற்கொலை ! சேலத்தில் நான்கு உயிர்கள் பலி !

சேலத்தின் நடந்த அவலம்: கந்­து­வட்டிக் காரர்­களின் மிரட்­டலால் காவு­கொள்­ளப்­பட்ட நான்கு உயிர்கள்

கந்­து­வட்டிக் கொடு­மை­யினால்  ஒரு குடும்­பமே   தற்­கொலை செய்­து­கொண்ட சம்­பவம் ஒன்று    இந்­தி­யாவின்   சேலத்தில் இடம்­பெற்­றுள்­ளது. வாழ்க்கைச் செலவு அதி­க­ரித்துச் செல்லும் வேகத்தில் கந்­து­வட்­டிக்கு பணம் கொடுப்பவர்க­ளதும் பணம் வாங்­கு­ப­வர்­க­ளி­னதும் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்துச் செல்­கின்­றது. இந்­தி­யாவைப் பொறுத்­த­வரை அதி­க­மான பணக்­கா­ரர்­களும் அதி­க­மான ஏழை­களும் அங்­குதான் நிறைந்­துள்­ளார்கள்.
இந்தக் கந்து வட்­டியின் விளைவு இப்­போது சிறிது சிறி­தாக புலப்­பட ஆரம்­பித்­துள்­ளது. அதன் உச்­சக்­கட்­ட­மாக அண்­மையில் ஓர் இளம் குடும்­பமே காவு கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சேலம் அருகில் உள்ள சிவ­தா­புரம் மாரி­யம்மன் கோவில் பகு­தியை சேர்ந்த வெள்­ளிப்­பட்­டறை தொழி­லாளி மாரி­யப்பன் (வயது 34), இவ­ரது மனைவி தங்­க­பொன்னு (வயது 30). இவர்­க­ளுக்கு வனிதா (வயது7), சர­வணன் (வயது 5), ரோஸ்னி (வயது 3) என்ற குழந்­தைகள் உள்­ளனர். இந்த குழந்­தை­களில் வனிதா 2 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தங்­கப்­பொன்னு தனது மகள் ரோஸ்­னியை சேலம் ரெட்­டிப்­பட்­டியில் வசிக்கும் தனது சித்தி ராணி­யிடம் கொடுத்து வளர்த்து வந்தார். ராணிக்கு குழந்­தைகள் இல்லை என்­பதால் அவரும் குழந்­தையை பாசத்­துடன் வளர்த்து வந்தார்.
மாரி­யப்பன் சிவ­தா­புரம் முத்­து­நாயக்­கன்­பட்டி கால­னியை சேர்ந்த முருகன் என்­ப­வ­ரிடம் வெள்ளி தொழி­லுக்கு வேலைக்கு சென்று வந்தார். இவ­ரிடம் மாரி­யப்பன் தனது வீட்டு செல­விற்கு இரண்­டேகால் இலட்சம் ரூபா கந்து வட்­டிக்கு கடன் வாங்­கி­யுள்ளார்.
இது­த­விர வேறு சில­ரி­டமும் அவர் கடன் வாங்­கி­யுள்ளார். இந்தக் கடன்­களை மாரி­யப்­பனால் திருப்பிச் செலுத்த முடி­யாத நிலைமை ஏற்­பட்­டது. கடன் கொடுத்­த­வர்கள் மாரி­யப்பன் வீட்­டிற்கு தின மும் வந்து பணத்தை திருப்பி கேட்டு வந்­த னர்.
இந்த பிரச்­சி­னையால் மாரி­யப்பன், முரு­க னின் வெள்­ளிப்­பட்­ட­றைக்கு வேலைக்கு செல்­லாமல் வீட்­டி­லேயே இருந்து வந்தார். கடன் தொல்­லையால் அவ­திப்­பட்டு வந்த மாரி­யப்பன் வெளியில் சென்று விட்டு கடந்த 27 ஆம் திகதி வீடு திரும்­பினார்.
இரவு 7.30 மணி­ய­ளவில்  மாரி­யப்­பனின்  வீட்­டிற்கு கடன்­கா­ரர்கள்   சிலர் வந்து அவரை மிரட்டிச் சென்­றனர். இதனால்   வாழ்க்­கையில்  வெறுப்­ப­டைந்த மாரி­யப்பன் வெள்­ளிப்­பட்­டறை தொழி­லுக்கு பயன்­ப­டுத்தும் சய­னைட்டை குடித்து குடும்­பத்­துடன் தற்­கொலை செய்ய முடிவு செய்தார். பின்னர் அவர் இது­பற்றி அவ­ரது மனை­வி­யி­டமும் கூறி­யுள்ளார். இதற்கு அவரும் சம்­மதம் தெரி­வித்­துள்ளார்.
மனைவி தங்­க­பொன்னு டீ வைத்து அதை பாத்­தி­ரத்தில் எடுத்து வந்தார். இதில் மாரி­யப்பன் தான் வீட்டில் வைத்து இருந்த சய­னைட்டை கொட்டி கரண்­டியால் கலக்­கினார். பிறகு இந்த டீயை மாரி­யப்பன் தனது 2 குழந்­தை­க­ளான வனிதா, சர­வணன் ஆகி­யோ­ருக்கு கொடுத்தார். இதை குடித்த அவர்கள் துடி­து­டித்து இறந்துள்ளனர். கண்­முன்னே தமது பிள்­ளைகள் துடி­து­டித்து இறந்­ததை பார்த்து கண­வனும், மனை­வியும் கதறி அழு­தனர்.
பின்னர் அவர்­களும் சயனட் விஷம் கலந்த டீயை குடித்­தனர். இந்த நிலையில் தங்­கப்­பொன்னு செல் போன் மூலம் ஓமலூர் ரெட்­டிப்­பட்­டியில் வசிக்கும் தனது தந்தை ரங்­க­சா­மிக்கு பேசி, நாங்கள் கடன் தொல்­லையால் அவ­திப்­ப­டு­கிறோம். கடனை திருப்பி அடைக்க முடி­ய­ வில்லை. இதனால் சய­னைட்டு குடித்து தற்­கொலை செய்து கொள்­கிறோம் என கூறி போனை வைத்து விட்டார். இதன் பின்னர் மாரி­யப்­பனும், தங்­கப்­பொன்­னுவும் சய­னைட்டு குடித்து தற்­கொலை செய்து கொண்­டனர்.
தங்­க­பொன்னு குடும்­பத்­துடன் தற்­கொலை செய்து கொள்­வ­தாக கூறி­யதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவ­ரது தந்தை உடனே அவ­ரது மகன் மற்றும் உற­வி­னர்­களை சிவ­தா­பு­ரத்­திற்கு அனுப்பி வைத்தார். இவர்கள் மாரி­யப்பன் வீட்டிற்கு வந்து பார்த்­தனர். அங்கு மாரி­யப்பன், அவ­ரது மனைவி தங்­கப்­பொன்னு, குழந்­தைகள் வனிதா, சர­வணன் ஆகியோர் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்­தனர். இந்த உடல்­களை பார்த்து அனை­வரும் கதறி அழு­தனர்.
பின்னர் இந்த சம்­பவம் குறித்து கொண்­ட­ லாம்­பட்டி பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து சேலம் பொலி ஸார் சம்­பவ இடம் விரைந்து வந்து சட­லங்­களை மீட்­ட­துடன் மேல­திக விசா­ர­ணை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றனர். மாரி­யப்பன் குடும்­பத்­துடன் தற்­கொலை செய் யப் பயன்­ப­டுத்­திய சயனைட் போத்­தல்கள் மற்றும் தேநீர் டம்­ளர்கள், பாத்­தி­ரங்­களை மீட்­டெ­டுத்த பொலிஸார் பரி­சோ­தனை மேற்­கொண்­டுள்­ளனர்.
மாரி­யப்பன், குடும்­பத்­துடன் தற்­கொலை செய்து கொண்­டதை அறிந்த பெருந்­தி­ர­ளான பொது­மக்கள் மற்றும் உற­வி­னர்கள் மாரி­யப்­பனின் வீட்டை முற்­று­கை­யிட்­டனர்.அத்­து டன், அவர்கள் நான்கு பேரின் சாவுக்கு கார­ண­மான கந்து வட்­டிக்­கா­ரர்­களை கைது செய்ய வேண்டும் என பொலி­ஸா­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இறந்த பொன்­னுவின் சகோ­தரர் முருகன் கொண்­ட­லாம்­பட்டி பொலி­ஸா­ரிடம் யார் யாரிடம் மாரி­யப்பன் கடன் வாங்கி இருந்தார் என முறைப்­பாடு செய்­துள்ளார்.
இத­னை­ய­டுத்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் சேலம் சிவ­தா­பு­ரத்தை சேர்ந்த முரு­கேசன் (வயது 33), ஏழு­மலை (வயது 30) ஆகி­யோரை கைது செய்­தனர். இவர்கள் மீது தற்­கொ­லைக்கு தூண்­டி­ய­தாக வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது.
முரு­கே­ச­னிடம் மாரி­யப்பன் .33 ஆயிரம் ரூபாவும், ஏழு­ம­லை­யிடம்3500 ரூபாவும் கடன் வாங்கி உள்ளார். இதை­விட சிவ­தா­பு­ரத்தை சேர்ந்த வெள்­ளிப்­பட்­டறை உரி­மை­யாளர் முருகன் மற்றும் ஒரு கடன் நிதி வழங்­கு­ந­ரையும் பொலிஸார் வலை­வீசி தேடி வரு­கி­றார்கள்.
முரு­க­னிடம் இருந்து இரண்­டேகால் இலட்­ சமும், ஒரு கடன் நிதி உதவி வழங்­கு­ன­ரி­ட­மி­ருந்து 22 ஆயிரம் ரூபாவும் மாரி­யப்பன் கடன் வாங்­கி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இவர்கள் தவிர மேலும் சில­ரி­டமும் மாரி­யப்பன் கடன் வாங்கி உள்ளார். இவர்­களில் யார் யார் வந்து மாரி­யப்­பனை மிரட்­டினர் என்றும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. தலை­ம­றை­வாக உள்ள முருகன் மற்றும் பைனான்ஸ் உரி­மை­யாளர் ஒரு­வரை பிடிக்கத் தனிப்­படை அமைக்­கப்­பட்­டுள்­ளது.
வெள்­ளிப்­பட்­டறை தொழி­லாளி மாரி­யப் பன் குடும்­பத்­துடன் தற்­கொலை செய்து கொண்ட சம்­பவம் சிவ­தா­பு­ரத்தில் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
இந்த சம்­ப­வத் தால் அந்தப் பிர­தே­ச ­மெங் கும் அமை­தி­யாக காணப்­ப­டு­கி­றது. இந்தப் பகு­தியில் ஏராளமான வெள்ளிப்பட்டறை கள் காணப்படுகின்றன. இந்த வெள்ளிப் பட்டறைகளை மூடி அந்தப் பகுதி மக்கள் தமது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பணக் கஷ்டத்தின் காரணமாக கந்துவட் டிக்கு கடன் வாங்கியதால் நான்கு உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொடுமைகள் தொடர்ந்தம் இடம்பெறாதிருப்பதற்கு கந்து வட்டிக்கு வாங்குபவர்கள் மட்டுமன்றி கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்களும் மனித நேயத்துடன் செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே இவ்வாறான உயிரிழப்புக்களை தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக