வியாழன், 21 நவம்பர், 2013

ஆயத்த ஆடைதயாரிப்பில் சாதிக்கும் திருநங்கைகள்

மதுரை: மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள்  இவர்களுக்கு வேலை கொடுக்கவே தயங்கும் நிலை இன்றும் உள்ளது. ஒதுக்கப்படும் இந்த சமூகத்தை சேர்ந்த இருவர், திருநங்கைகள் மட்டுமின்றி ஆண், பெண் அனைத்து தரப்புக்கும் வேலை வாய்ப்பை அளித்து முன்னுதாரணமாக உள்ளனர்.மதுரையை சேர்ந்தவர் பாரதி கண்ணம்மா. திருநங்கையான இவர், தற்போது தனது பெயரில் ஒரு அறக்கட்டளையை துவக்கி திருநங்கைகளுக்கான  பல்வேறு சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். வேலை தேடிக் கொண்டிருக்காமல், பிறருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நோக்கத்தோடும், அவர்கள்  மீதான தவறான பார்வையை போக்கிடவும் முயற்சிகளை துவக்கினார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.


சென்னையை சேர்ந்த திருநங்கை ப்ரியாபாபு என்பவருடன் இணைந்து மதுரை, நாகமலை புதுக் கோட்டை, என்ஜிஓ காலனி பகுதியில் ‘வானம் பாடி தையலகம்’ என்ற பெயரில் கார்மென்ட்ஸ் கம்பெனியை துவக்கி ஆண், பெண், திருநங்கை  என 13 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளார். திருப்பூரை சேர்ந்த ஒரு பனியன் கம்பெனியுடன் இணைந்து 5 யூனிட் கார்மென்ட்ஸ் ஆரம்பிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர் .தற்போது முதல் கட்டமாக ஒரு யூனிட் செயல் பட்டு வருகிறது. இதில் 11 லட்சம் மதிப்பிலான தையல் மிஷின்கள், நு£ல் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பனியன் கம்பெனியிடம் பெற்று, தைத்து கொடுக்கும் வேலையை செய்கின்றனர்.

கடந்த 9.9.13 முதல் செயல்பட்டு வரும் இந்த ‘வானம்பாடி’ தையலகத்தில் 360 டஜன் வரையிலான ஜட்டிகளை தைத்து அனுப்பி உள்ளனர். இவர்களது பணி நேர்த்தியாக இருந்த நிலையில் தொடர்ந்து ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். தற்போது யூனிட்டை அதிகரிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.அரவாணி பாரதி கண்ணம்மா கூறுகையில்,  தொழில் துவங்கி வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக கார்மென்ட்ஸ் ஆரம்பித்து பலருக்கும் வேலை வாய்ப்பை அளித்து வெற்றி பெற்றுள்ளோம். தற்போது சில திருனங்கைகள்  முழுமையாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  எத்தனை பேர் வந்தாலும் வேலை தரப்படும். விரைவில் முழுக்க திருநங்கைகளை  கொண்ட ஒரு யூனிட்டை செயல்படுத்தும் முயற்சியில் உள்ளோம்Ó என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக