சனி, 2 நவம்பர், 2013

அமெரிக்காவின் மருத்துவ மோசடிகள் செய்த இந்திய டாக்டர் கைது

Amar Nath Bhandary, 53, from Oklahoma was sentenced to 30 months in prison, followed by three years supervised release and a $20,000 fine, US Attorney for the Western District of Oklahoma Sanford Coats said in a statement. 
இந்திய மருத்துவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓக்லஹாமாவில் மருத்துவராகப் பணியாற்றி வந்த இந்தியரான பண்டாரி, 2008ஆம் ஆண்டு தாம் செய்யாத சேவைக்காக போலி ஆவணங்கள் மூலம் காப்பீட்டுத் தொகை கோரியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பண்டாரி மீது கடந்த மே மாதம் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஓக்லஹாமா நீதிமன்றம் பண்டாரிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மேலும் 20 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மூன்று ஆண்டுகள் வரையில் அவரை போலீஸார் தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை வினியோகம் செய்ததாகவும் பண்டாரி மீது ஓக்லகாமா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 பேரில் 5 பேர் உயிரிழந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக