சனி, 2 நவம்பர், 2013

ஸ்வேதா மேனனிடம் பாலியல் சேஷ்டை செய்த காங்கிரஸ் எம்.பி. பீத்தாம்பர குரூப் (வயது 73)

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு
நடிகை ஸ்வேதா  வெறும்  ஒரு சாதாரண சினிமா நடிகை அல்ல . அவர் உண்மையில் சமுக உணர்வு  உள்ள ஒரு திரைப்பட போராளி என்றே சொல்ல வேண்டும், பிரசவகாட்சியில் நடித்ததன் மூலம்தாய்மையின்  மகத்துவத்தை புரிய வைத்தவராவார் 
‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.>ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி நேற்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது.இந்த விழாவில் நடிகை ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.‘நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது.
என்னிடம் குறும்பு செய்த நபர் யார் ? என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்’ என்று ஸ்வேதா மேனன் கூறினார். ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார். தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக