திங்கள், 4 நவம்பர், 2013

ஸ்வேதா மேனன் வழக்கை வாபஸ் பெற்றார் ! குறுப்பு சேட்டன் மன்னிப்பு கேட்டாராம்!

கொல்லத்தில் நடந்த படகுப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
மலையாளத் திரை நடிகை ஸ்வேதா மேனன். அப்போது அவரிடம் அந்த விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப்பு தவறாக நடந்துகொண்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து பீதாம்ரா க்ருப் மன்னிப்பு கோரியதால், புகாரை திரும்பப் பெற்றதாக ஸ்வேதாமேனன் தெரிவித்துள்ளார்.
பீதாம்ரா க்ருப் மீது கொல்லம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே புகார் வாபஸ் பெறப்பட்டதால், அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கை கைவிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக