திங்கள், 4 நவம்பர், 2013

கடன் பத்திரம் தான் இருக்கு: ரெய்டுக்கு வந்தவர்களிடம் தெரிவித்த தயாரிப்பாளர்

சென்னை: தல நடிகரின் துவக்கம் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான
வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கடன் பத்திரங்கள் தான் சிக்கியதாம். கடந்த வியாழக்கிழமை தல நடிகரின் துவக்கம் படம் ரிலீஸ் ஆனது. அன்றைய தினமே அந்த படத்தின் தயாரிப்பாளர், தளபதி நடிகரின் மாவட்டம் பட தயாரிப்பாளர், சிங்கம்-சிறுத்தையின் ஆஸ்தான தயாரிப்பாளர் மற்றும் முன்னணி காமெடி நடிகர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் துவக்கம் பட தயாரிப்பாளர் வீட்டில் சோதனை நடத்தியபோது பெரிதாக ஒன்றும் சிக்கவில்லையாம். நான் காசு இல்லாமல் இருக்கிறேன், என்னிடம் இந்த கடன் பத்திரங்கள் தான் இருக்கின்றன என்று கூறிய தயாரிப்பாளர் அவற்றை அதிகாரிகளிடம் அளித்தாராம். சோதனை நடத்திய அதிகாரிகளும் தயாரிப்பாளரிடம் கடன் தான் இருக்கிறது வேறொன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்களாம். இந்த தயாரிப்பாளரின் கஷ்டத்தை போக்க தல நடிகர் அவருக்கு மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக