புதன், 13 நவம்பர், 2013

நடிகை அஞ்சலி : சித்தி என் வீட்டை அபகரித்துக் கொண்டார்: சித்தி பாரதி தேவி மீது நடிகை வழக்கு

சென்னை: சென்னையில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டை தனது சித்தி பாரதி தேவி அபகரித்துக் கொண்டதாக நடிகை அஞ்சலி வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர் சற்குணம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நடிகை அஞ்சலிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அஞ்சலி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது< சென்னை வளரசவாக்கத்தில் எனக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டை எனது சித்தி பாரதி தேவி மற்றும் சூரியபாபு ஆகியோர் அபகரித்துக் கொண்டனர். அந்த வீட்டுக்கு என்னால் போக முடியவில்லை. எனது வீட்டை அபகரித்த பாரதி தேவி உள்ளிட்டோர் மீது வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் புகார் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வளசரவாக்கம் போலீசுக்கு நீதிமன்றம் உத்தர விட வேண்டும்.
எனது வீட்டை அபகரித்துள்ள பாரதி தேவியையும், சூரிய பாபுவையும் வெளியேற்ற உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் இது குறித்து பதில் அளிக்குமாறு வளவரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக