புதன், 13 நவம்பர், 2013

புத்தகயா கோவிலுக்கு மேற்கூரை அமைக்க 300 கிலோ தங்கம் வந்தது: தாய்லாந்து கமாண்டோ படை பாதுகாப்பு

பீகார் மாநிலம் புத்த கயா நகரில் உள்ள பழமைவாய்ந்த மகாபோதி கோவிலுக்கு தங்கத்தினால் மேற்கூரை அமைக்கப்படுகிறது. கோபுரம் முழுவதும் தங்கத் தகடுகளால் மூடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக தாய்லாந்தில் இருந்து பக்தர்கள் 289 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த தங்கம் 13 பெட்டிகளில் அடைக்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் பாங்காக்கில் இருந்து புத்த கயாவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த தங்கத்துடன் தாய்லாந்தில் இருந்து தொழில்நுட்ப நிபுணர் குழுவும், கமாண்டோ படையினரும் வந்துள்ளனர். பலத்த பாதுகாப்புடன் தொழில்நுட்ப நிபுணர்கள், தங்கத் தகடுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கத்திற்கு பாதுகாப்பாக கமாண்டோ படையினர் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் நிர்வாகமும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.


விலை உயர்ந்த தங்கத்தை உருக்கி வேலை நடப்பதால், பணிகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. தாய்லாந்தின் முன்னாள் துணை பிரதமர் ஜெனரல் பிரிச்சா தலைமையில் வந்துள்ள 40 பேர் கொண்ட இந்த குழுவினர், 40 முதல் 50 நாட்களுக்குள் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர் என்று கோவில் நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக