புதன், 6 நவம்பர், 2013

அமோல் பலேகர்: மாநில மொழிப் படங்களை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மாநில மொழிப் படங்கள் புறக்கணிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று, இந்தி நடிகரும், இயக்குநருமான அமோல் பலேகர் தெரிவித்தார்.பெங்களூருவில் திங்கள்கிழமை பெங்களூரு பத்திரியாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: தேசிய அளவில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
 மகாராஷ்டிரத்திலும் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், விழாவில் மாநில மொழிப் படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இது என் போன்றோருக்கு வேதனை அளிக்கிறது.
 தாதாசாகேப் பால்கே பிறந்த மாநிலமான மகாராஷ்டிரத்தில் மாநிலப் படங்கள் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
 விழாவில், அதிக அளவு கலைப் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. வசூல் ரீதியில் வெற்றிப் பெற்ற கமர்ஷியல் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 90 சத முழு நீளத் திரைப்படங்கள் தோல்வி அடைவதால், தற்போது குறும் படங்கள் அதிக அளவில் கவனிக்கப்படுகின்றன.
 அரசியலிலிருந்து வெகு தூரம் விலகி இருக்கிறேன். எனவே, அண்மையில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குறித்து பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ள கருத்துக் தொடர்பாக எதையும் கூறமாட்டேன்.
 45 ஆண்டுகள் சினிமா வாழ்க்கை எனக்கு பல்வேறு வெற்றிகளை தந்துள்ளது.
 அந்தத் துறையில் மீண்டும் நுழைவது குறித்து ஆலோசித்து வருகிறேன் என்றார் அவர்.  dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக