செவ்வாய், 5 நவம்பர், 2013

'வீடியோ ஸ்டோரி டெல்லிங்' குறுகியகால ஆன்லைன் பெல்லோஷிப் பயிற்சி

9.9 ஸ்கூல் ஆப் கம்யூனிகேஷன் மற்றும் இன்டர்நேஷனல் சென்டர் பார் ஜர்னலிஸ்ட்(ஐசிஎப்ஜெ) இணைந்து 'வீடியோ ஸ்டோரி டெல்லிங்' என்ற குறுகியகால ஆன்லைன் பெல்லோஷிப் பயிற்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ ஸ்டோரி டெல்லிங் பயிற்சி, எம்மி விருது வென்ற வீடியோ பத்திரிகையாளர் மூலம் வழங்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியிட்டப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வீடியோவில் ஆர்வமுள்ளவர்கள் மேலும் முன்னேறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று தொழில் சேவைகள் 9.9 அசோசியட் தலைவர் மற்றும் குன்ஜன் அகர்வால் தெரிவித்துள்ளார்.
குறுகிய கால பயிற்சியில் சிறந்து விளங்குபவர்கள் 'நியூயார்க் டைம்ஸ்' 'இந்தியா இங்கி' போன்ற வலைப்பதிவில் வீடியோ ஒருங்கிணைப்பாளராக ஒருவார கால பயிற்சிக்கு அமர்த்தப்படுவர்.
மாணவர்கள் வீடியோ படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் குறித்து அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும். வீடியோ கேமரா அல்லது  வீடியோ மற்றும் ஆடியோ திறன்களை தொலைபேசி மூலம் இணைக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இது குறித்து விரிவான தகவல்களுக்கு http://soc.edu.in/onlinevideo-story.php என்று இணையதளத்தை பார்க்கலாம் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக