புதன், 27 நவம்பர், 2013

சங்கராச்சாரியை கைது பண்ணியதற்காக ஜெயலலிதா மன்னிப்பு கேக்கணுமாம் சுப்ரமணியம் சுவாமி சொல்கிறார்

சங்கராச்சாரியார் விடுதலை- ஜெ. மன்னிப்பு கேட்க சு.சுவாமி வலியுறுத்தல்
டெல்லி: சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் 2004ஆம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி தீபாவளி நாளில் சங்கராச்சாரி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து விஜெயேந்திரர் உள்ளிட்ட சங்கரமடத்தைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டனர். அப்போது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை அப்போது திமுக வரவேற்றது. ஆனால் பாரதிய ஜனதா மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று சங்கராச்சாரியார்கள் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி, புதுவை நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த வழக்கில் சங்கராச்சாரியாரை கைது செய்ததற்காக ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும். சங்கராச்சாரியாரை கைது செய்ததன் மூலம் ஹிந்து மத்தை அவர் அவமதித்துவிட்டார்.
ஜெயலலிதா மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றார்.
இதேபோல் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பல்பிர் பூஞ்ச் என்பவரும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு இது. தற்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக