திங்கள், 11 நவம்பர், 2013

புஷ்பா தங்கதுரை என அறியப்பட்ட எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன் காலமானார் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது இவரது கதைவசனத்தில்


2 ஆயிரம் நாவல்களுக்கு மேல் எழுதி வாசகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த பிரபல தமிழ் நாவலாசிரியர் புஷ்பா தங்கதுரை சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. ஸ்ரீ வேணுகோபாலன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் 'புஷ்பா தங்கதுரை' என்ற புணைப்பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் சுமார் 2 ஆயிரம் நாவல்களை எழுதியுள்ளார். அறிவியல், கிரைம், சமூகம் என பல தலைப்புகளில் தனக்கே உரிய சிறப்பு நடையில் இவர் எழுதிய பல நாவல்கள் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஸ்ரீ வேணுகோபாலன் என்ற தனது இயற்பெயரில் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தலப்புராணங்களையும் எழுதியுள்ள இவர் சில நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களையும் உருவாக்கியுள்ளார்.
இவரது பிரசித்தி பெற்ற நாவல்களான 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது', 'நந்தா என் நிலா' ஆகியவை திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டன. திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த புஷ்பா தங்கதுரை உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2 வார காலமாக உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சுவாசித்து வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  thenee.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக