செவ்வாய், 12 நவம்பர், 2013

ஜெயா அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டை ! சாலை பணியாளர்களை உடனே பணியில் அமர்த்தவும் நஷ்ட ஈடும் கொடுக்கவும்

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டதால் அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைதர உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2002, செப்டம்பர் 5ல் 9,813 சாலைப் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாகதீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் சாலைப் பணியாளர்களுக்கு 6 மாதச் சம்பளத்தைநஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. மீண்டும் வேலை வழங்கக் கோரி சாலைப் பணியாளர்களும், ஆறு மாதச் சம்பளத்தை நஷ்ட ஈடாக தர வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்துதமிழக அரசும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், ஒட்டு மொத்தமாக பதவி நீக்கம் செய்தது சட்டவிரோதம். எனவே வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 3 மாதத்துக்குள் தமிழக அரசு மீண்டும் வேலை வழங்க வேண்டும். மேலும்முன் தேதியிட்ட காலத்தில் இருந்து சம்பளமும் வழங்க வேண்டும் என்று கூறியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. மேலும் உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரியது. இதனை விசாரித்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் நீதிபதி சின்கா ஆகியோர் இடைக்கால தடை விதிக்க தேவையில்லை என்றும் வழக்குவிசாரணை மீண்டும் ஜனவரி 28ல் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக