புதன், 6 நவம்பர், 2013

கோவாவில் நைஜீரியர்கள் போதைவஸ்து அட்டகாசம் ! நைஜீரியாவில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற போவதாக தூதரக அதிகாரி மிரட்டல்


பனாஜி : 'கோவாவில், வசிக்கும் நைஜீரிய மக்களை, வெளியேற்றுவதை போலீசார் நிறுத்த வேண்டும்; இல்லையேல், நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை விரட்டி அடிப்போம்' என, நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரித்துள்ளார். கோவாவில் அத்துமீறல கோவாவில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து, சில நாட்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின், நைஜீரியர்கள், வன்முறையில் இறங்கினர். போலீஸ் வேன்களை அடித்து நொறுக்கியதோடு, போலீசாரிடமிருந்து லத்திகளை பறித்து, போலீசாரையும், உள்ளூர் மக்களையும் மிரட்டினர்.பிணத்தை நடுரோட்டில் போட்டு, தங்கள் நாட்டு தூதரக அதிகாரி வந்தால் தான் வெளியே றுவோம் என, மிரட்டல் விடுத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக, 50 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, டில்லியில் உள்ள நைஜீரிய தூதரக அதிகாரி, ஜேக்கப் நவாடியா நேற்று, கோவா வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட, நைஜீரிய மக்களை
சந்தித்து பேசினார்.
கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க. இவங்களும் இட ஒதுக்கீடு கேட்டு போராடுவாங்க.


பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கோவாவில் வாடகை வீட்டில் வசிக்கும், நைஜீரிய மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில், போலீசாரும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதை நிறுத்த வேண்டும். இந்தியாவில், 50 ஆயிரம் நைஜீரியர்கள் தான் வசிக்கின்றனர். ஆனால், நைஜீரியாவில், 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.கோவா போலீசார், தங்கள் நடவடிக்கையை நிறுத்தா விட்டால், நைஜீரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை விரட்டி அடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, கோவா முதல்வர், மனோகர் பாரிக்கர் கூறியதாவது:< பொய்யான புகார்: >போதை மருந்து விற்கும் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில், நைஜீரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், உள்ளூர் மக்கள் தான் கொன்றுவிட்டதாக கூறி போராட்டம் நடத்துகின்றனர்.கோவாவில் வசிக்கும் பெரும்பாலான நைஜீரியர்களிடம், பாஸ்போர்ட் மற்றும் விசாக்களின் போட்டோ நகல் தான் உள்ளது. எனவே, அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளோம். யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை.இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக