ஞாயிறு, 10 நவம்பர், 2013

மியான்மரில் வறுமையில் வாடும் 90 வயது இளவரசி


யங்கூன்: மியான்மர் நாட்டின் அரசபரம்பரையைச் சேர்ந்த கடைசி இளவரசி குடிசை வீட்டில் வறுமையில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் முன்பு மன்னர் ஆட்சி நடந்தது. திபா என்பவர் கடைசி மன்னராக இருந்தார். ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது கடந்த 1885-ம் ஆண்டில் இவரது அதிகாரம் பறிக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. இதையடுத்து மன்னர் பரம்பரை ஒழிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினர் சாதாரண குடி மகன்களாக்கப்பட்டனர். அந்த வழியில் வந்த கடைசி இளவரசி ஆக ஹிடெக் சு பாயா ஜி என்பவர் இன்னும் உயிர் வாழ்கிறார். அந்த இளவரசிக்கு 90 வயது ஆகிறது. தற்போது யங்கூன் நகரில் ஒரு குடிசை வீட்டில் வறுமையில் வாழ்கிறார். ஓரளவு வசதியாக வாழ்ந்த தான் குடும்ப சண்டை காரணமாக பரம்பரை வீட்டை இழந்து தற்போது குடிசையில் வாழ்வதாக கூறுகிறார். தான் இளவரசியாக வசதியுடன் வாழ்ந்த காலத்தை இளமைக்கால நினைவுடன் கழிப்பதாக தெரிவிக்கிறார். 60 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசியாக வலம் வந்த இவர் தற்போது அண்டை
வீட்டாருக்கு கூட யார் என்று தெரியவில்லை என்பதுதான் பரிதாபம்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக