சனி, 30 நவம்பர், 2013

100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.1 லட்சத்துக்கு அமைச்சர் ராஜிவ் சுக்லாவின் அறக்கட்டளைக்கு சுவாகா

மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், மத்திய அமைச்சரும், காங்., சேர்ந்தவருமான, ராஜிவ் சுக்லாவின் அறக்கட்டளைக்கு, வெறும், 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. அறக்கட்டளை: காங்., கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், ராஜிவ் சுக்லா. தற்போது, மத்திய பார்லி மென்ட் விவகாரத் துறை இணை அமைச்சராக உள்ளார். மகாராஷ்டிராவில், மும்பை அருகேயுள்ள, அந்தேரியில், பி.ஏ.ஜி., திரைப்பட சமூகம் என்ற அறக்கட்டளையை, இவரின் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இதன் தலைவராக, ராஜிவ் சுக்லாவின் மனைவி அனுராதா, பதவி வகிக்கிறார். 2008ல், இந்த அறக்கட்டளையின் செயலராக, ராஜிவ் சுக்லா, பதவி வகித்தார். அப்போது, அந்தேரியில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான இடம், இவரின் அறக்கட்டளைக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தின், தற்போதைய சந்தை மதிப்பு, 100 கோடி ரூபாய். ஆனால், 2008ல், இந்த நிலத்தை விற்றபோது, 1976ம் ஆண்டைய, சந்தை நிலவரத்தின்படி, விற்பனை செய்துள்ளனர்.அறக்கட்டளை என்று அமைப்பதே வரி ஏய்ப்பு செய்வதற்கும்..இப்படி ஊழல்கள் செய்யவும்தான்.. 

 15 ஆண்டு குத்தகை:மேலும், இந்த நிலத்துக்கு அருகேயுள்ள, மற்றொரு இடம், அதே அறக்கட்டளைக்கு, வெறும், 6,000 ரூபாய்க்கு, 15 ஆண்டு குத்ததைக்கு தரப்பட்டுள்ளது. இந்த நிலமும், மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமானது தான். இது தொடர்பான தகவல்கள், தற்போது, வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, 'ராஜிவ் சுக்லா மீதும், அரசு நிலத்தை, அவரின் அறக்கட்டளைக்கு, சலுகை விலையில் கொடுத்த அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., - சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், போர்க்கொடி தூக்கியுள்ளன.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக