வெள்ளி, 25 அக்டோபர், 2013

ஏற்காடு இடைத்தேர்தலை சீரியசாக எடுக்கிறது தி.மு.க! அழகான ஏற்காட்டில் அதிமுகவை அசைக்க முடிவு ? Why இந்த கொலைவெறி ?

தி.மு.க., ஏற்காடு இடைத்தேர்தலை மிக சீரியசாகதான் எடுத்துள்ளது. தி.மு.க.
தலைவர் கருணாநிதி நேற்று திடீர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை சென்னை அறிவாலயத்தில் நடத்தியிருக்கிறார். இந்த திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் வியூகங்களை வகுக்க, வட மாவட்டங்களை சேர்ந்த சில மாவட்டச் செயலர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவுக்கும், தி.மு.க. வேட்பாளர் மாறன் ஆகியோர் மத்தியில் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சியின் தேர்தல் பணிகள் உச்ச அளவில் இருக்கும் என்று கூறத் தேவையில்லை. அதற்கு இணையாக, தி.மு.க.வும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தி.மு.க. தலைமையின் உத்தரவு.

தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளும் பிரிக்கப்பட்டு, மாவட்டச் செயலர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, தேர்தல் சம்பந்தமான முக்கிய விஷயங்களை விவாதிக்கும் ஆலோசனைக் கூட்டம், அறிவாலயத்தில் நேற்று மாலையில் நடந்தது. அக்கூட்டத்தில், சேலம், நாமக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களை சேர்ந்த, சில மாவட்டச் செயலர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலர்களுக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர், ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியினர் முறைகேடான பணிகளில் ஈடுப்பட்டால் அவற்றை தடுத்து தேர்தல் கமிஷனுக்கு உடனுக்குடன் புகார் மனுக்களை அனுப்புவது குறித்தும், பொதுமக்கள் ஓட்டுக்களை கவர்வது குறித்தும் சில திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் தலைவர் கருணாநிதியால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தி.மு.க. வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
தற்போது நடக்கும் முன்னேற்பாடுகளை பார்த்தால், ஆளும் கட்சிக்கு தி.மு.க. கடும் போட்டியை கொடுக்கும் என்றே தெரிகிறது.
viruvirupu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக